வைபவ் சனா அல்தாப் நடிப்பில் ‘RK நகர்’

0

Loading

அனைவரையும் கவரும் பட தலைப்புகள் அமைவது எளிதல்ல. அது மாதிரி அமைந்து அது தற்கால  பரபரப்பான நிகழ்வோடு  ஒன்று சேர்ந்தால், நிச்சயம் அது மக்களை ஈர்க்கும். இது போன்ற ஒரு தலைப்பு தான் ‘RK நகர்’. வைபவ் மற்றும் சனா அல்தாப் நடிப்பில், சரவண ராஜன் இயக்கத்தில்  உருவாகியுள்ள இப்படத்தை வெங்கட் பிரபுவின் ‘ ப்ளாக் டிக்கெட் கம்பெனி’ நிறுவனமும்  பத்ரி கஸ்தூரியின் ‘ஷ்ரத்தா என்டர்டைன்மெண்ட் ‘ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் சம்பத் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமையை, தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, சமீபத்தில் ‘மெர்சல்’ மூலம் அசுர வெற்றியை தந்த ‘தேணான்டாள்   பிலிம்ஸ்’ நிறுவனம் பெற்றுள்ளது. இது ‘RK நகர்’ படத்தின் வர்த்தக பலத்தை பல மடங்கு கூட்டியுள்ளது. இப்படத்தை ‘தேணான்டாள்  பிலிம்ஸ்’ விரைவில் தமிழகமெங்கும் பிரம்மாண்டமாய் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது.
பிரேம்ஜி அமரன் இசையில் , S வெங்கடேஷ் ஒளிப்பதிவில், பிரவீன் K L படத்தொகுப்பில் இப்படம் உருவாகியுள்ளது.
Share.

Comments are closed.