தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்கள் மிருகத்தனமாக கொல்லப்பட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இறந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல். போராட்டம் சமூக நோக்கத்துக்காக நடத்தப்படுகிறது. தனிப்பட்ட விஷயங்களுக்காக நடத்தப்படுவது அல்ல. 50,000 மக்கள் சேர்ந்து ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடுகிறார்கள் என்றால் கண்டிப்பாக மக்கள் , பொதுஜன நலத்துக்காக தான் போராடுகிறார்கள் .
மரியாதைக்கூறிய பிரதமர் கண்டிப்பாக தன்னுடைய அமைதியான மனநிலையை கலைக்க வேண்டிய நேரம் இது. போராட்டம் ஜனநாயகத்தில் ஒன்று. அதில் ஏன் மக்கள் ஈடுபடக்கூடாது.
அரசாங்கம் மக்களுக்காக தான். வேறுயாருக்கும் அல்ல.
2019 பற்றி கவனமாக யோசிக்க வேண்டும் மக்கள்
– விஷால்