மேயாத மான் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரியின் வெற்றியை தொடர்ந்து, ஸ்டோன் பெஞ்ச் ஒரு புதிய மற்றும் புது யுக பயணத்தில் “ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்ஸ்” மூலம் அடியெடுத்து வைத்திருக்கிறது,
புத்தம் புதிய கோணத்தில் சிந்தனையையும் சிரிப்பையும் கூட்டும் வீடியோக்கள் செய்வதே எங்களது நோக்கம். திறமை வாய்ந்த பல புதிய கலைஞர்களுடன் கை கோர்த்து பல பரிமாணங்களில்ஸ்கெட்ச் வீடியோஸ், வெப் சீரீஸ், மியூசிக் வீடியோஸ், ஆவணப்படங்கள், இணையத்திற்க் கென்று பிரத்தேயகமான திரைப்படங்கள் என்று பல வெளிவர உள்ளன.
யூடியூப் சந்தை – ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்சின் முதல் படைப்பு
எங்களது முதல் படைப்பு வெர்ச்சுவல் ரியாலிட்டி வழியே யூடியூப் உலகத்திற்குள் செல்லும் ஒரு முதியவரின் பயணம். கிரேசி மோகன் குழுவின் புகழ் சீனு மோகன் மற்றும் தமிழ் யூடியூப் உலகின் முன்னணி நட்சத்திரங்களும், மேலும் பல சுவாரசியமான கதாபாத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளனர்.
இப்பயணம் சவால் மிக்க மற்றும் சுவாரசியமானதாகவும் இருக்கும் என்று நினைக்கிறோம். இப்பயணத்தில் எங்களுக்கு உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் போல் தொடர வேண்டுகிறோம்.