Tuesday, April 22

ஸ்பைடர் மேன்

Loading

ஸ்பைடர் மேன்- கதைகள்

 

Stan Lee மற்றும் Steve Ditco ஆகிய இருவரும், ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை உருவாக்கிய தருணத்தில் இருந்து, காமிக் கதை புத்தகங்கள், Animation தொடர்கள், தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் என பல ரூபங்களிலும் ஸ்பைடர் மேன் உலா வந்துள்ளார்.

 

1962 ஆம் ஆண்டுதான் முதன்முதலாக Amazing Fantasy என்கிற காமிக் கதை புத்தகம் வெளியானது. Amazing Spiderman என்கிற தலைப்பில் 1973 மற்றும் 1988 ஆண்டுகளில் இரு புத்தகங்கள் வெளியாகின.

1990 இல் Avengers மற்றும் 2012 இல், The Amazing Spiderman ஆகியவையும் வெளிவந்தன.

 

Animation தொடர்களை பொறுத்தமட்டில், 1967 இல் முதல் தடவையும், 1981 இல் இரு முறையும் வெளிவந்தன.

மீண்டும், 1994, 1999, 2003, 2008, 2012 ஆகிய ஆண்டுகளிலும் அடுத்தடுத்து வெளியாகின.

 

திரைப்படங்களை பொறுத்தமட்டில், 1977 ஆம் ஆண்டு, Spiderman திரைப்படம் உருவாக்க பட்டது. Spiderman Strikes Back 1978 இல் வெளியானது.

Sam Raimi இயக்கத்தில் 2002 , 2004 அண்ட் 2007 ஆண்டுகளில், Spiderman, Spiderman-2, Spiderman-3 ஆகிய படங்கள் வெளிவந்தன. Tobey Maguire இவற்றில் Spiderman ஆக நடித்திருந்தார்.

 

1977 மற்றும் 1978 ஆகிய ஆண்டுகளில் இரு தொலைக்காட்சி படங்களும் உருவாக்கப்பட்டன.

Andrew Garfield Spiderman ஆக தோன்றிய, The Amazing Spiderman 2012 இல் வெளியானது. அதன் இரண்டாம் பாகம் 2014 இல் வெளிவந்தது. Marc Webb இரு படங்களையும் இயக்கி இருந்தார்.

 

Spiderman :Homecoming என்கிற இந்த புதிய படத்தை Jon Watts இயக்கி உள்ளார்.

Maxwell Dillon,  Norman Osborn, Aleksei Sytsevich, Michael Keaton ஆகியோர் இதுவரை வில்லன் வேடங்களில் தோன்றியுள்ளனர். Cletus Kasady 2018 படத்தின் வில்லன் என்பதாக ஒரு பேச்சு!

 

இப்படத்தின் உடை அலங்கார நிபுணர் Louise Frogley, புதுமையான முறையில் Spiderman இன் உடையை அமைத்துள்ளார். இம்முறை, Spiderman, கண்கள் மூலமாகவும் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும்!

 

இப்படத்தில் Spiderman ஆக நடித்துள்ள Tom Holland அதிர்ஷ்டசாலிதான்!