ஹன்ஸிகாவுக்கு திருப்புமுனையாக அமையப்போகும் படம்…

0

Loading

தமிழ் சினிமாவுக்கு எப்போதும் நல்ல திறமையாளர்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் இருக்கும் ஜியோஸ்டார் எண்டர்பிரைசஸ், ஹன்சிகா மோத்வானி நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில்  நடிக்கும் புதிய பெயரிடப்படாத  படத்தை அறிவித்திருக்கிறது. இதுவரை ஜாலியான பெண் கதாபாத்திரங்களையே ஏற்று நடித்து வந்த ஹன்சிகா, மிகுந்த ஈடுபாடும், அர்ப்பணிப்பும் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மனிதநேய செயல்களுக்கு பெயர் போன இந்த அழகு நடிகை இந்த சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நேர்த்தியாக நடிப்பதற்காக தற்போது ஹோம் வொர்க் செய்து வருகிறார். நாயகியை மையப்படுத்தி சுழலும் இந்த திரில்லர் கதையில் மிகவும் பவர்ஃபுல்லான நடிப்பை வெளிப்படுத்த இருக்கிறார் ஹன்சிகா. மசாலா படம், ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜமீல் கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார். வணிக மற்றும் தொழில்நுட்ப விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் தயாராக இருக்கிறது. 
 
ரசிகர்கள் பார்க்க விரும்பும் வகையில் வணிக ரீதியில் திரைக்கதையை மேம்படுத்த நிறைய உழைப்பை கொடுத்திருக்கிறோம். மிகுந்த பொறுப்பும், அர்ப்பணிப்பும் தேவைப்படுகிற இந்த கதாபாத்திரத்துக்கு முதன்மையான தேர்வாக ஹன்சிகா இருந்தார். பெருகி வரும் நாயகிகளை மையப்படுத்திய கதைகள் ட்ரெண்டும், ரசிகர்கள் மத்தியில் குறையாத ஹன்சிகாவின் புகழும் தான் இந்த படம் உருவாக முக்கிய காரணம். அவருடன் இரண்டு படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறேன்,  அவர் என்னை ஈர்த்திருக்கிறார். அதனாலேயோ என்னவோ இந்த கதையை எழுதும்போதே அவரின் இமேஜ் இந்த கதையில் பொருந்தி விட்டது. இந்த கதையில் இன்னும் சில  கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது, அதற்காக பிரபலமான நடிகர்களை தேர்வு செய்து வருகிறோம். ஜியோஸ்டார் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராவ் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் விஜய் வர்மா சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை தருவதாக உறுதி அளித்திருக்கிறார்கள். ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது, படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும்.
Share.

Comments are closed.