“ஹர ஹர மஹாதேவகி” கூட்டணி மீண்டும் இணையும் இருட்டு அறையில் முரட்டு குத்து

0

Loading

ப்ளு கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் K E  ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் புதிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இதில் கௌதம் கார்த்திக், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சன்தோஷ் பி ஜெயகுமார். இப்படத்திற்கு தருண் பாலாஜி ஒளிப்பதிவை மேற்கொள்ள, இசையமைப்பாளர்  பாலமுரளி பாலா இசையமைக்கிறார். பிரசன்னா G K படத் தொகுப்பை கவனிக்க, சுப்ரமணிய சுரேஷ் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றிருக்கிறார்.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் சன்தோஷ் பி ஜெயக்குமார் பேசும் போது,‘ இது ஒரு அடல்ட் ஹாரர் காமெடி ஜேனரில் உருவாகும் படம். இப்படத்தின் படபிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெறுகிறது. நாயகியாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் விரைவில் அறிவிப்போம். படத்தின் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாகும்.’ என்றார்.

அண்மையில் வெளியாகி வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்ற ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தின் கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

Share.

Comments are closed.