927 total views, 2 views today
பரபல ஹாலிவுட் நட்சத்திரம் மில்லா ஜோவோவிச் நடிப்பில் கடந்த 15 வருடமாக வெளிவந்து கொண்டிருக்கும் ரெசிடனட் ஈவில் தொடரின் நிறைவு பகுதி திரைப்படமாக பிப்ரவரி 3ஆம் தேதி வெளிவரவுள்ளது. ரெசிடனட் ஈவில், ஃபைனல் சாப்டர் (Resident Evil ; Final Chapter ) எனப் பெயரிடப்பட்டுள்ளது, சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.
அநியாயத்திற்கான பெரும்போராட்டம் இனிதே முற்றுப்பெறுகிறது. ஆலிஸ் கதாப்பாத்திரத்திற்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி மக குறைவு. பல்வேறு ஆக்ஷன் காட்சிகளின் அநாயசமும், கடினமான பல்வேறு படபடிப்பு இடங்களின் தாக்கமும் எங்களை திடமாக்கியுள்ளது. உலகத்தை காக்கும் எண்ணம் பண்பும், பரிவும் கற்றுக்கொடுத்துள்ளது.
ஆக்ஷன் அதிரடி நிறைந்த மற்றமொரு பொழுதுபோக்கு திரைப்படம் மக்கள் பார்வைக்கு விரைவில்.
மேலும், சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ‘கட்டபாவ காணோம்’ ‘இனிமே இப்படிதான்’ புகழ் சந்தோஷ் தயாநிதி இசையில் சுனிதா சாரதி குரலில் ‘யாரோ இவள் ‘ என்ற விளம்பர பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரபல ரெசிடன்ட் ஈவில் தொடரின் கடைசி பாகமான இப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளிவருகிறது.