340 total views, 1 views today
தெலுங்கில் வெற்றி வெற்றி பெற்ற RX 100 படத்தின் நாயகன் கார்த்திகேயா நடிக்க தமிழில் பல வெற்றிப்படங்களை தயாரித்த கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க, சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் “ ஹிப்பி “ படத்தில் நாயகியாக நடித்துவரும் டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது கிடைத்துள்ளது. ஹிந்தி படங்களில் தனது இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தியதற்காக இந்த விருதினை நேற்று அவர் பெற்றுள்ளார்.
பல ஹிந்தி பாடல்களில் நாயகியாக நடித்துவரும் டிகங்கான சூர்யவன்ஷி விரைவில் தமிழிலும் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாதாசாகெப் பால்கே விருது வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.