ஹிப் ஹாப் போட்டியில் வென்ற சென்னை மாணவன் ஜஷ்வந்த் பேட்டி

0

 247 total views,  2 views today

எனக்கு 2013-ல் ஹிப் ஹாப் இன்டர்நேஷ்னல் என்னும் நடனப் போட்டியில் பங்கேற்க இந்தியாவை பல்கலைக்கழக பிரிவில் பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நிதி பிரச்சனையால் அந்த வருடம் என்னால் பங்குபெற இயலாமல் ஆனது. எனது திறமையை வெளிபடுத்த முடியாமல் நான் மிகவும் வேதனைபட்டு நின்றேன். நாட்கள் வெறுமையாக உருண்டோடியது. எனது 12-வது வகுப்பில் நுழைந்த நேரம் காணொளிகளின் மூலம் இதே போட்டிக்கு தேர்வு செய்யபடுகிறார்கள் என்பதை அறிந்து நான் எனது நடனத்தை தேர்விற்கு அனுப்பி வைத்தேன். தேர்ச்சியும் பெற்றேன். அரசு தேர்வை முடித்தவுடன் பயிற்சிக்காக மும்பை சென்றேன். வெவ்வேறு  மாநிலங்களிலிருந்தும்  பகுதிகளிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட நடன கலைஞர்கள் ஒரே கூரையின் கீழ் கூடி பயிற்சியை துவங்கினோம். வெகுவாக எங்கள் பயிற்சி பல சோதனைகளின் இடையே நடைபெற்றது. இறுதியாக அமெரிக்காவிற்கு பறக்க தயாரானோம். மிகுந்த உற்சாகத்தோடும்
 நம்பிக்கையோடும் ஹிப் ஹாப் உலக கோப்பை நடனத்தில் பங்குபெற சென்றோம். நாங்கள் 0.01 புள்ளியில் எங்களது அடுத்த நிலைக்கு முன்னேர முடியாமல் பெறும் ஏமாற்றம் அடைந்தோம். 56 நாடுகள்   பங்கு பெற்றதில் 29-வது இடத்தையே தக்க வைக்க முடிந்தது. ஏமாற்றத்தோடு நாடு திரும்பி வறுத்தத்துடன்  எனது அன்றாட வேலையில் ஐக்கியமானேன். கல்லூரியில்  எனது வாழ்க்கை துவங்கியது. மேலும் பகுதி நேர நடன ஆசிரியராகவும் ஒரு பள்ளில் சேர்ந்தேன். வாழ்க்கை மிகவும் வெறுமையானது என் கனவுகள் நிறைவேறுமா என்று வருந்திய  தருணங்களில் கோடை மழை போல்  வந்தது ஒரு இனிய செய்தி. அமெரிக்காவிற்கு சென்ற குழுவிலிருந்து வேறு சிலர் கனடா நடன உலக்கோப்பைக்காக சிலரை தேர்ந்தெடுத்துள்ளார்கள்  என்றும் அதில் எனது பெயரும் இருந்ததை அறிந்து பெரும் மகிழ்ச்சியுற்றேன். மார்ச் 2017 எனது பயிற்சி பயணம் துவங்கியது. இந்த முறை எப்படியாவது என்னை  நிருபித்து ஆகவேண்டும் என்று பெரும் முயற்சியில் ஈடுபட்டேன் மிகுந்த கடினமான நாட்களை கடந்தேன் உண்ண உணவும் தூக்கமும் கனவாய் ஆனது. இரவும்  பகலும் எங்கள் கடும் பயிற்சி
 இடம் பெற்றது எங்களது நடனத்தில் இந்தியப்பாணி நடனத்தையும்    மேற்கத்திய நடனத்தையும் கலந்து தந்திருந்தோம். இந்தவிதமான நடனத்தை ஃபோக்கலோர் நடனம் என்று கூறுவர். ‘ஒளிச்சருக்கல்’ போன்ற பல கண் கவர் பகுதிகளை நடனத்தில் இணைத்திருந்தோம். அனைத்தும் இந்த நடனத்திற்கு பெரும் அழகைச் சேர்ந்தது;. இறுதியாக நாங்கள் கனடாவிற்கு செல்லும் அந்த நாளும் (ஜூன் 25’ 2017) வந்தது.  கனடாவில் பயிற்சி செய்யக்கூட இடமில்லாமல் தவித்தோம். மேலும்  அந்த குளிர் நமக்கு பழக்கமில்லாததால் பெரும் உடல் அசௌகரியங்களால் அவதியுறும் நிலை ஏற்பட்டது.  நாங்கள் தங்கியிருந்த விடுதியின் வாகன நிறுத்துமிடத்தில் தான்  எங்கள் பயிற்சிக்கான  இடம் கிடைத்தது. எங்களுக்கு கிடைத்த அந்த இடத்தை பயன்படுத்தி எங்கள் பயிற்சியை தீவிரமாக மேற்கொண்டோம். அத்தனை தொல்லைகள் வந்தாலும் நாங்கள் முயற்சியையும் பயிற்சியையும் முழு மூச்சோடு மேற்கொண்டோம்.  35 நாடுகள் பங்கேற்ற அந்த உலகக்கோப்பை போட்டியில் நம் நாட்டிற்கு தரப்பட்ட இட ஒதுக்கீடு 35-வது இடம் அதாவது நாங்கள் கடைசி போட்டியாளரானோம். எங்களது நடனம் அறங்கேறி முடிந்த தருணம் அரங்கமே எழுந்து நின்று பாராட்டியது. மகிழ்ச்சியில் திளைத்தோம். உலகத்தின் மூளைகளிலிருந்தெல்லாம் வந்த பல்வேறு நாட்டினரும் எழுந்து நின்று பாராட்டிய  அந்த தருணம்   எனது நாட்டை பெருமைப்படுத்திய  மிகப் பெரும் தருணமாக நினைத்து  பெரு மகிழ்ச்சியில் கண்ணீர் கண்களை குளமாகிற்று பரிசுகளை ‘காலா காட்சி’  என்னும் விழாவில் அறிவிக்கப்படும் எனத் தெரியவந்தது.  அந்த நாளில் ஒரு சில நல்ல நடன குழுக்கள்  அரங்கத்தில் நடனம் புரிய தேர்ந்தெடுத்தனர். அதில் நாங்களும் தேர்வு செய்ய பெற்றோம்.  அதாவது ஜூலை 5’ 2017 எங்கள் நிகழ்ச்சியின் நிறைவில்  நம் நாட்டின் பெயர் ஒலிக்க  பெரும் படபடப்போடும் எதிர் பார்ப்போடும் திரும்பினேன். இந்தியா (மதலிடம்) தங்க பதக்கத்திற்கு தேர்ச்சி பெற்றது என்ற அறிவிப்பை என்னை திக்குமுக்காட செய்தது. அதுமட்டுமல்லாமல் எல்லா பிரிவிலும் மிக உயர்ந்த மதிபெண்ணிற்காக கோப்பையையும் தட்டிச் சென்றோம். எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மகிழ்ச்சிக்குறிய நாளாயிற்று என்னோட வாழ்க்கையின் கனவு  ‘ஹிப் ஹாப் இன்டர்நேஷ்னலிலும்’ நமது நாட்டை பெருமைப்படுத்தும்படி செய்ய வேண்டும் என்பதே ஆகும். இவ்வாறு கூறினார் ஜஷ்வந்த்
Share.

Comments are closed.