287 total views, 1 views today
பல தமிழ மற்றும் மலையாளம் படங்களில் கலை இயக்குநராக பணிபுரிந்த அம்ப்ரோஸ் “நெக்ஸ்ட் டோர் கப்பிள்ஸ்” எனும் படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார்.
இவர் மலையாளத்தில் புகழ் பெற்ற பிண்ட்டோ கண்ணூர் மற்றும் மனோஜ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.
ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் கதை கேரளா, வயநாடுக்கு சுற்றுலா செல்லும் மூன்று பேர் அங்கே வரும் ஒரு சிறுவனை கடத்திக்கொண்டு சென்னைக்கு வருவது போலவும், அந்த சிறுவனைத் தேடி அவனுடைய பெற்றோர் வருவது போலவும் அமைக்கப் பட்டுள்ளது.
இதில் நாயகனாக புதுமுகம் ராகுலும் நாயகிகளாக அமலா மற்றும் அனிஷா அறிமுகமாகிறார்கள்.
படத்துக்கு திரைக்கதை – சாபு நெடுங்கோலம். ஒளிப்பதிவு – வினோத் ஜோசப். இசை – ஜான்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தை சிவ இந்து புரொடக்ஷன் சார்பில் சிவ இந்து தயாரிக்கிறார். தமிழ் திரைப்படத்துறையின் தற்போதைய போராட்டம் சுமூக நிலையை அடைந்தவுடன் , மே மாதம் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, கோவை மற்றும் கேரளாவில் தொடர்ந்து நடைபெற உள்ளது .
