1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த கலகலப்பு 2 படத்தின் டீசர்

0

 266 total views,  1 views today

1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்ஃபுல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்

குஷ்பு சுந்தர் தயாரிப்பில் சுந்தர். C இயக்கத்தில்
ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நடிக்கும்
கலகலப்பு -2

2012 ஆம் ஆண்டு சுந்தர்.C. இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி ,ஓவியா நடிப்பில் வெளிவந்த படம் கலகலப்பு.. முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவான இந்தப்படம் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்து சூப்பர் ஹிட் படமாக வசூல் சாதனை படைத்தது.

கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர். C தயாரிக்க அவ்னி மூவி மேக்கரிஸ் சார்பில் குஷ்பு தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முற்று பெற்ற நிலையில், படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர்.

டிசம்பர் 24 ஆம் தேதி இரவு 11 மணிக்கு படத்தின் தயாரிப்பாளரான குஷ்பு படத்தின் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர் யூடியூப்பில் No.1 – ல் டிரெண்டானது. மேலும் தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

கலகலப்பு – 2 ஆம் பாகத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் ராதா ரவி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

கலகலப்பு 2 படத்தை 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தொழில்நுட்பக்குழு :

எழுத்து – இயக்கம் – சுந்தர். C.

திரைக்கதை – வேங்கட்ராகவன்

தயாரிப்பாளர் – குஷ்பு சுந்தர்

ஒளிப்பதிவு – U K S

வசனம் – பத்ரி

இசை – ஹிப் ஹாப் ஆதி

பாடல் – மோகன் ராஜ்

படத்தொகுப்பு – ஸ்ரீ காந்த்

கலை – பொன்ராஜ்

சண்டைப் பயிற்சி – தினேஷ்

நடனம் – ஷோபி, பிருந்தா

ஒப்பனை – செல்லத்துரை

ஆடை வடிவமைப்பு – ராஜேந்திரன், பாலு

ஸ்டில்ஸ் – V. ராஜன்

தயாரிப்பு மேற்பார்வை – பால கோபி

நிர்வாக தயாரிப்பு – A . அன்பு ராஜா

Share.

Comments are closed.