15 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் பிரபு – பிரபு தேவா!

0

Loading

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் இளைய திலகம் பிரபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதற்கட்டப் படப்பிடிப்பு கோவாவில் முடிந்த நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நேற்று(சனிக்கிழமை) முதல் தொடங்கியது. அதில் பிரவுதேவா – பிரபு 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய சக்தி சிதம்பரம் இந்த பாகத்தையும் இயக்குகிறார்.

அம்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு செளந்தர்ராஜன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரேசி மோகன் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதுகிறார்.

பிரபு தேவா நிக்கி கல்ராணி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்காக பிரபுதேவா குடும்பமும், நிக்கி கல்ராணி குடும்பமும் திருப்பதிக்கு செல்லும் போது, நடக்கும் சம்பவங்களின் கலகலப்பான தொகுப்பே `சார்லி சாப்ளின்-2′. திருப்பதிக்கு போனா திருப்பம் வரும் என்பார்கள். அது என்ன திருப்பம் என்பது படத்தின் சஸ்பென்ஸ் என்று படத்தின் இயக்குனர் கூறியிருக்கிறார்.

 

Share.

Comments are closed.