2 மூவி buffs தயாரிப்பில் “டாவு”

0

Loading

உற்சாகமூட்டும் , இளைஞர்களை கவரும் காதல் படங்களுக்கு என்றுமே மவுசு உண்டு. அந்த வகையில் 2 மூவி buffs என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், “தில்லுக்கு துட்டு” வெற்றி  படத்தை இயக்கிய ராம் பாலா இயக்கத்தில்,கயல் சந்திரன் கதாநாயகனாக நடித்துஉருவாகும் “டாவு”  திரைப்படம் அறிவிப்பு வந்த போதே இளைஞர்களை கவர்ந்து விட்டது என சொல்லலாம்.
சந்தோஷ் தயாநிதி இசை அமைக்க , தீபக் குமார் பதி ஒளிப்பதிவில், கே எல் பிரவீன் படத்தொகுப்பு செய்ய , ரெமியன் கலை வண்ணத்தில், அஜய்  சதீஷ் நடனம் அமைக்க, சுபீகா ஆடை  வடிவமைக்க,பிரபுவின் சண்டை பயிற்சியில் முனிஷ் காந்த், லிவிங்ஸ்டன்,ஊர்வசி, மனோ பாலா, கல்யாணி நடராஜன், பாவா லக்ஷ்மணன் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் ரெபா மோனிகா ஜான். இவர் மலையாளத்தில் நிவின் பாலி உடன்  நடித்து அறிமுகமானவர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
” இந்தக் கதைக்கு மிக அழகான கதாநாயகி  தேவை. ரெபேக்கா மோனிகா ஜான் மிக மிக பொருத்தமாக இருப்பார்.தமிழ் ரசிகர்களுக்கு இவரை நிச்சயம் பிடிக்கும்” என்கிறார் இயக்குனர் ராம்பாலா.
 
Share.

Comments are closed.