Wednesday, February 12

200 நடன கலைஞர்களுடன் பிக்பாஸ் சினேகன் ஆடிப்பாடிய பாடல்

Loading

 200 நடன கலைஞர்களுடன்                      

          பிக்பாஸ் சினேகன் ஆடிப்பாடிய பாடல்   “ எவனும் புத்தனில்லை “                                                                          

                                      படத்திற்காக படமானது   

வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ்  பட நிறுவனம் அதிகப்  பொருட் செலவில் தயாரிக்கும் படம் “ எவனும் புத்தனில்லை “                                                                                                                           

இந்த படத்தில் நபிநந்தி கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஷரத் என்ற புதுமுகம் நடிக்கிறார்.                                                                                          நாயகிகளாக நிகாரிகா, சுவாசிகா இருவரும் நடிக்கிறார்கள். ஒரே ஒரு பாடல் காட்சியில் பூனம் கவுர் நடிக்கிறார். மற்றும் சங்கிலிமுருகன், வேலராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், எம்.கார்த்திகேயன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, மாரிமுத்து, பசங்க சிவகுமார், K.T.S.பாஸ்கரன், முரு, ஆறு, மலேசியா ராதா சரஸ்வதி, THR.ராகா மாறன், அற்புதன் விஜய் , ஜோதி, தர்ஷினி, எலிசபெத் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரே ஒரு பாடல் காட்சியில் சினேகன் நடிக்கிறார்.                                                                                                                                 

வசனம்        –        T.S.சுரேஷ்குமார்  /  பாடல்கள்  –  சினேகன்                                                                                                                                                                                                               

கலை           –        A.பழனிவேல்  /  ஒளிப்பதிவு   –  ராஜா.C.சேகர், பாலகிருஷ்ணன்                                                                                                                                                                                                                         

இசை           –        மரியா மனோகர்                                                                                                          

நடனம்        –        அசோக்ராஜா, சங்கர்                                                                                               

ஸ்டன்ட்      –        அன்பறிவு, மிராக்கில் மைக்கேல்                                                                              

எடிட்டிங்     –        சுரேஷ்அர்ஷ்                                                                                                                          

இணை தயாரிப்பு  –        K.T.S.பாஸ்கரன், K.சுப்பிரமணியம், I.ஜோசப் ஜெய்சிங், M.கார்த்திகேயன், V.C.சூரியன்                                                                                                      

கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார்        –  S.விஜயசேகரன்                                       

இந்த படத்தில் முக்கிய அம்சமாக சொல்லப்படும் விஷயத்தை இயக்குனர் எஸ்.விஜயசேகரன் கூறியதாவது..  உலகத்தில் பெரும்பாலான உயிரினங்கள் தன் இனத்தை தானே வேட்டையாடி அழிப்பதில்லை ஆனால் மனித இனத்தில் ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்பது போல் இரு பாலினமும் தன் சுயநலத்திற்காக ஒருவரை ஒருவர் வேட்டையாடி நாகரீகம் என்ற பெயரில் நகரத்தின் ஒட்டு மொத்த சுயநல மனிதக் கூட்டங்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிராக 6000 அடி  உயர மலைகிராமத்தில் வெள்ளந்தியாக வாழ்ந்த இளைஞன்  மருத்துவக் கல்லூரி மாணவனுடன் இணைந்து  நடத்தும் யுத்தமே எவனும் புத்தனில்லை.

சினேகன் எழுதி அவரே நடித்த பாடல் காட்சி ஒன்று மலேசியா, சென்னை போன்ற இடங்களில் மிகப் பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டது.                                                                                 

“எதுவும் தப்பில்லை                                                                                                                               

எவனும் புத்தனில்லை “ என்ற பாடல் காட்சி இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களை குறி வைத்து எடுக்கப் பட்ட பாடல் காட்சி இது. இந்த பாடல் காட்சியில் 200 நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். மலேசியாவிலும், சென்னையிலும் மிகப் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டது.   

இந்த படத்தின் FIRST LOOK POSTER & LYRICAL VIDEO  நடிகர் விஷால் மற்றும் தயரிப்பாளர்  K.E.ஞானவேல் ராஜா இருவரும் வெளியிட்டார்கள் .இதில் மரியாமனோகர் இசையில் கவிஞர் சினேகன் பாடல் எழுதி அவரே 200 வெளிநாட்டு அழகிகளுடன் கிளுகிளுப்பு நடனம் ஆடியது குறிப்பிடதக்கது. L.R.ஈஸ்வரி மற்றும்மலேசிய பாப் பாடகர்கள் மாமா மாப்ள K16,HWING, MURU, AARU,THR RAAGA MARAN பாடி இருக்கிறார்கள்.ஆடியோ வெளியீடு TIMES GROUP JUNGLEE MUSIC .