எந்த ஒரு நிறுவனத்தின் வெற்றியும் அதன் வளர்ச்சியை பொறுத்தே இருக்கும். இந்த வளர்ச்சிக்கு நேரம் காலம் பாராத கவனம், அர்ப்பணிப்பு மற்றும் கடும் உழைப்பு அவசியம். சினிமா தயாரிப்பிலும், அதன் விளம்பர யுக்திகளிலும் எல்லோரையும் திரும்பி பார்க்க செய்து கொண்டிருக்கும் நிறுவனம் தற்பொழுது சினிமா விநியோகத்தில் ’24 PM’ என்ற பெயரில் தனது காலை பாதிக்கவுள்ளது.
” சினிமாவின் ஒரு முக்கிய அம்சம் விநியோகம். எந்த வித ஒளிவு மறைவும் இல்லாத எங்களது அணுகுமுறையை கொண்டு சினிமா வினியோகத்தில் கால் பாதிக்கவுள்ளோம். ‘Axess Film Factory’ நிறுவனத்தின் அருள்நிதி நடிக்கும் ”இரவுக்கு ஆயிரம் கண்கள் ”, விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடிக்கும் ”ராட்சஸன்” ஆகிய படங்களோடு எங்கள் விநியோகம் பயணத்தை தொடங்கவுள்ளோம். திரு. டில்லி பாபுவோடு இணைந்து எங்கள் விநியோகத்தை ஆரம்பிப்பதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. சமீபத்தில் ‘மரகத நாணயம்’ என்ற வசூலை குவித்த படத்தை தயாரித்த அவருக்கு இது போல மேலும் நிறைய தரமான படங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமும் முனைப்பும் உள்ளது. விநியோகத்துறையிலும் நாங்கள் கடுமையாக உழைத்து சாதிக்க முனைப்போடு உள்ளோம் ” என்றார் ’24 PM ‘ R D ராஜா.