30 லொகேசன்களில் 96 படத்தின் படப்பிடிப்பு

0

 780 total views,  1 views today

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை போன்ற  வெற்றிப்படங்களை  தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால்

இந்த படங்களை தொர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும்  ‘96 என்ற படத்தை தயாரிக்கிறார்.

கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மற்றும் காளிவெங்கட் வினோதினி நடிக்கிறார்கள்.  மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

ஒளிப்பதிவு           –       சண்முகசுந்தரம்

இசை                    –        கோவிந்த் மேனன்  

எடிட்டிங்               –        கோவிந்தராஜ்

கலை                              –        வினோத் ராஜ்குமார்

பாடல்கள்             –        உமாதேவி, கார்த்திக் நேத்தா.

எழுத்து, இயக்கம்            –        C.பிரேம்குமார். இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படதின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.   

தயாரிப்பு   –  எஸ்.நந்தகோபால்

 

படத்திற்காக அந்தமான் மற்றும் குலுமனாலியில் உள்ள ஸ்பிட்டிவேலி என்ற இடத்தில்  விஜய்சேதுபதி சம்மந்தப்பட்ட  பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது.  ராஜஸ்தான், கல்கத்தா போன்ற இடங்களில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. 

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் விரைவில் துவங்க உள்ளது. அதில் விஜய்சேதுபதி, திரிஷா, ஜனகராஜ்  சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப் பட உள்ளது.

இதுவரை விஜய்சேதுதுபதி நடித்து வெளிவந்த  படங்களின் படப்பிடிப்பு  இவ்வளவு வேறு பட்ட இடங்களில் நடைபெற்றது இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த படத்தில் அவ்வளவு  லொக்கேஷன்கள்  இடம் பெற்றுள்ளன. இது ஒரு டிராவலிங் சம்மந்தப் பட்ட கதை என்பதால் இவ்வளவு லொகேஷன்கள் தேவைப்படுகிறது என்றார் இயக்குனர் பிரேம்குமார். 

Share.

Comments are closed.