5வது ஃபெமினா மிஸ் இந்தியா நிகழ்வு வரும் ஜூன் மாதம் நடக்கிறது. மிஸ் இந்தியா அமைப்போடு இணைந்து இந்தியாவின் பெருமைமிகு மிஸ் இந்தியாவை தேர்ந்தெடுக்கும் நிகழ்வை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்பான்சர் செய்து வருகிறது இந்தியாவின் ஃபேஷன் மையமாக விளங்கும் ஃஎப் பி பி (FBB). கடந்த ஆறு ஆண்டுகளாக கலர்ஸ் உடன் இணைந்த பிறகு, நல்ல வரவேற்பும், கூடுதல் வெளிச்சமும் கிடைத்து வருகிறது.
ஜூன் மாதம் நடக்கும் மாபெரும் இறுதிப்போட்டியில் ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் அழகிகள் பங்கேற்பார்கள். மிஸ் இந்தியா தமிழ்நாடு, மிஸ் இந்தியா ஆந்திர பிரதேசம், மிஸ் இந்தியா கர்நாடகம், மிஸ் இந்தியா கேரளா, மிஸ் இந்தியா தெலுங்கானா என ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் இருந்து தலா மூன்று பேர் பெங்களூருவில் பிப்ரவரி 24ஆம் தேதி கிரவுண் பிளாஸாவில் நடக்கும் தென் மண்டல கிரீடம் சூட்டும் விழா நடைபெறும் விழாவில் கலந்து கொள்வார்கள்.
அதற்கு தமிழகம் சார்பில் அழகிகளை தேர்வு செய்யும் அலங்கார அணிவகுப்பு சென்னை ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் உள்ள பிக் பஜாரில் நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் தமிழ்நாட்டை சார்ந்த 80க்கும் மேற்பட்ட அழகிகள் கலந்து கொண்டனர். ஆடிஷனை 2017 மிஸ் இந்தியா ஷெர்லின் சேத் நடுவராக இருந்து நடத்தினார். ரசிகர்கள் மத்தியில் நடந்த இந்த அலங்கார அணிவகுப்புக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. ஜூன் மாதம் மும்பையில் நடக்கும் இந்த மிஸ் இந்தியா இறுதிப்போட்டியில் பங்கு பெறுபவர்களுக்கு, துறையில் இருந்து சிறந்த நிபுணர்களை கொண்டு தீவிர பயிற்சி அளிக்கப்படும்.
ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு வழிகாட்டி உதவியாக இருப்பார். அந்த வகையில் தென் மண்டலத்துக்கு நடிகை ரகுல் பிரீத் சிங் வழிகாட்டியாக பொறுப்பேற்றிருக்கிறார். தென்னிந்திய போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தன்னால் முடிந்த சிறப்பான பங்களிப்பை கொடுக்க போவதாகவும் கூறுகிறார் அழகு புயல் ரகுல் பிரீத் சிங்.
சென்னையில் நடந்த இந்த ஆடிஷனில் இருந்து 3 அழகிகள் தமிழகத்தின் சார்பாக போட்டியிட தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் விபரம்:
1. ஈஷா கோஹில்
பள்ளி: பவன்’ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம்
கல்லூரி: எஸ் ஐ ஈ டி கல்லூரி
2. மதிஷா ஷர்மா
பள்ளி: சிஷ்யா பள்ளி, அடையார்
கல்லூரி: சிம்பியாஸிஸ் சட்டக்கல்லூரி, ஐதராபாத்
3. அனுகீர்த்தி வாஸ்
பள்ளி: ஆர் எஸ் கே மேல்நிலை பள்ளி, திருச்சி
கல்லூரி: லயோலா கல்லூரி, சென்னை
இந்த ஆடிஷனில் தேர்வான மூன்று போட்டியாளர்களுக்கும் பிக் பஜார் ஸ்டோர் மேலாளர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.