8 தோற்றங்களில் விஜய் சேதுபதி

0

 293 total views,  1 views today

IMG_4815
வித்தியாசமான கதை  மற்றும் கதாபாத்திரங்கள் தேர்விற்கு பேர் போனவர் நடிகர் விஜய் சேதுபதி . இவரின் அடுத்த படமான ” ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ”  இவருடைய பெயர் சொல்லும் அப்படி பட்ட  ஒரு  வித்தியாசமான படமாகும் . இது ஓர் அட்வெஞ்சர் காமெடி படமாகும் . இதில் இவர் , இதுவரை யாருமே செய்திராத, ஒரு சுவாரஸ்யமான பழங்குடிஇன  தலைவராக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்க்காக 8 வெவ்வேறு தோற்றங்களில் கலக்கியிருக்கிறார் . இவரது நடிப்பு திறனையும் அர்ப்பணிப்பையும் கண்டு வியந்ததாக கூறுகிறார் இப்படத்தில் இயக்குனர்  ஆறுமுக குமார் .
” 8 வெவ்வேறு தோற்றங்களில் விஜய் சேதுபதி இக்கதையில் விளையாடியுள்ளார். இப்படத்தின் இயக்குனராக மட்டும் இன்றி அவரது தீவிர ரசிகராகவும் இப்படத்தின் அவரது நடிப்பை மிகவும் ரசித்தேன் . இப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிக மிக  மிக  சுவாரசியமானது மட்டுமின்றி  மிகவும் சவாலானது கூட.  இச்சவாலை அவர் மிக சுலபமாகவும் புத்திசாலித்தனமாகவும் கையாண்டதை கண்டு ஆச்சிரியப்பட்டு  வியந்தேன் .
” ஒரு நல்ல நாள்  பாத்து சொல்றேன் ” மிக சிறப்பாக வந்துள்ளது .  படப்பிடிப்பு கிட்டத்தட்ட  முடிந்தாகிவிட்டது . விஜய் சேதுபதியின் 8 வெவ்வேறு தோற்றங்களும் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும்  கவரும். இப்படத்தின் இன்னொரு கதாநாயகனான கவுதம் கார்த்திக் சமீபத்தில் சுவைத்த தரமான வெற்றி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது . அவர் மேலும் பல உயரங்களை தொடுவர் . தமிழ் சினிமா ரசிகர்களில் ரசனையை மனதில் வைத்து கொண்டே ”ஒரு நல்ல நாள்  பாத்து சொல்றேன் ” படமாக்கி உள்ளோம்’  என தன்னம்பிக்கையுடன் கூறி விடைபெற்றார் இயக்குனர் திரு. ஆறுமுக குமார் .
Share.

Comments are closed.