90 அதிர்ஷ்ட கற்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று தான் ‘மரகத நாணயம்’

0

 1,327 total views,  1 views today

நேற்றைய 500 – 1000 மும், இன்றைய 2000 மும் இருந்தால் மட்டும் மரகத நாணயத்தை நெருங்கி விட முடியாது…..ஏனென்றல் அதற்கு பாதுகாப்பாக இருப்பது ஒரு ஆவி கும்பல்… அவர்களையும் மீறி அந்த ‘மரகத நாணயம்’  கல்லை அடைய ஓர் வழி இருக்கின்றது…..அது என்ன வழி என்பதை தெரியபடுத்த விரைவில் வர இருக்கின்றது, ஆதி – நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘மரகத நாணயம்’ திரைப்படம். ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் ஜி டில்லி பாபு தயாரித்து, அறிமுக இயக்குநர் ஏ ஆர் கே சரவண் இயக்கி இருக்கும் இந்த ‘மரகத நாணயம்’ திரைப்படத்தில் பழம்பெரும் நடிகர் ஆனந்தராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், அருண்ராஜா காமராஜ், டேனி, கோட்டா ஸ்ரீனிவாச ராவ், பிரம்மானந்தம், எம் எஸ் பாஸ்கர், மைம் கோபி மற்றும் முருகானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர் பி வி ஷங்கர், இசையமைப்பாளர் திபு நைனன் தாமஸ் மற்றும் கலை இயக்குநர் என் கே ராகுல் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் மரகத நாணயம் படத்தில் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு.
“ரசிகர்கள் இதுவரை ஆதி சாரை ஒரு அதிரடி நாயகனாக தான் பார்த்து இருப்பார்கள்…..ஆனால் எங்களின்  மரகத நாணயம் மூலமாக முற்றிலும் மாறுபட்ட ஆதி சாரை அவர்கள் காண இருக்கிறார்கள்….இதுவரை எவரும் கண்டிராத நகைச்சுவை குணங்களை கொண்டு நாங்கள் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்…. ஒரு அறிமுக இயக்குநருக்கு இத்தகைய சுதந்திரம் கொடுத்து, என்னை ஊக்குவித்த என்னுடைய தயாரிப்பாளர் ஜி டில்லி பாபு சார் அவர்களுக்கு  என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்…..அதேபோல், ஒவ்வொரு காட்சியிலும் கன கச்சிதமாக நடித்து, மரகத நாணயத்தின் ஒளியை கூட்டிய கதாநாயகன் ஆதி சாருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்…..” என்று கூறுகிறார் மரகத நாணயம் படத்தின் இயக்குநர் ஏ ஆர் கே சரவண்.
“எங்கள் ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ நிறுவனத்தை பொறுத்த வரை கதை தான் ஹீரோ….. வலுவான கதை களங்கள் கொண்ட திரைப்படங்களை மட்டுமே நாங்கள் தேர்வு செய்து தயாரித்து வருகிறோம்…..வெறும் லாபம் சம்பாதிப்பதில் மட்டுமில்லாமல்,  தரமான திரைப்படங்களின் அற்புதத்தை ரசிகர்களுக்கு  உணர்த்த வேண்டும் என்பதில் தான் எங்களுக்கு நாட்டம் அதிகம்….அதனை எங்கள் மரகத நாணயம் திரைப்படம் உறுதிப்படுத்தும். 90 கதைகளை கேட்டு, அதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அற்புதமான படைப்பு தான் இந்த மரகத நாணயம்…..” என்று கூறுகிறார் தயாரிப்பாளரும், ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ நிறுவனருமான ஜி டில்லி பாபு.
” திரைப்படங்களில் பொதுவாக இருக்கும் அதிரடி காட்சிகள் மற்றும்  மசாலா காட்சிகள் இந்த படத்தில் இருக்காது….ஆனால் படம் ஆரம்பித்த நொடியில் இருந்து முடியும் நொடி வரை, ரசிகர்கள் ஒவ்வொருவரும் உற்சாகத்தில் மிதப்பார்கள்…..இதுவரை யாரும் பார்க்காத நகைச்சுவை பாணியை நாங்கள் எங்களின் மரகத நாணயம் படத்தில் உள்ளடக்கி இருப்பதே அதற்கு காரணம்….. என்னுடைய  புதிய அவதாரத்திற்கு  பிரகாச வெளிச்சத்தை  இந்த மரகத நாணயம் ஏற்படுத்தி தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது…..” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் மரகத நாணயம் படத்தின் கதாநாயகன் ஆதி.

Share.

Comments are closed.