கடந்த சில நாட்களாக தொடரும் கனமழையால் கேரளாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலசரிவு ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் வெள்ளப் பெருக்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் ரகுமான் தன் சொந்த ஊரான நிலம்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை அறிந்து அங்கு விரைந்தார். அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த அவர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்களுக்கான உதவிகள் கிடைக்க உரிய ஏற்பாடுகள் செய்தது வருகிறார். மேலும் வெள்ள பாதிப்பு இடங்களை பார்வையிட்டார்.
MLA P.V அன்வர் அவர்களையும் மலப்புறம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா ஊராட்சியை சேர்ந்த
வெள்ளபாதிப்பில் உதவும் தன்னார்வலர்களையும் சந்தித்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கும் உதவிகளுக்குமான ஏற்பாடுகளை செய்தார்.
முன்னாள் அமைச்சரும் நிலம்பூர் சட்ட மன்ற உறுப்பினருமான ‘ஆர்யாடன் ‘
முகம்மது அவர்களை சந்தித்து மக்களின் பிரச்னைகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி கேடறிந்தார். ரஹ்மான் மூன்று நாள் அங்கு முகாமிட்டு உள்ளார்.