சோனாவின் புது அவதாரம்

0

 213 total views,  1 views today

 
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளின் காலம் சில வருடங்கள் மட்டும் தான் எவ்வளவு தான் கவர்ச்சி காட்டினாலும் ஒரு சில கவர்ச்சி நடிகைகளை தவிர மற்ற அனைவரும் காலப்போக்கில் மறைந்து போய்விட்டனர் ஆனால் இந்த நிலையில் இருந்து சற்று வித்தியாசமானவர் நடிகை சோனா 
 
தமிழ் சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் சோனா. குசேலன், பத்துக்கு பத்து உள்ளிட்ட பல படங்களில் படு கவர்ச்சியாக நடித்திருப்பார். சில படங்களில் நடிகர் வடிவேலு மற்றும் விவேக்குடன் ஜோடியாக நடித்து காமெடியும் செய்திருப்பார். 
 
சில காலமாக கவர்ச்சிவேடங்களில் நடிக்காமல் ஒதுங்கி நல்ல வாய்ப்புக்காக காத்து இருந்த அவருக்கு மலையாளத்தில் நல்ல வாய்ப்புகள் வரவே ஒப்பம் போன்ற மலையாள படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் ஏற்று மலையாள திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்றார்.மேலும் தமிழில்  நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தபொழுது ஸ்டார் குஞ்சுமோன் தயாரிப்பில் வி விநாயக் நடிப்பில்  அவதாரவேட்டை படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகியுள்ளனர்.  கதையும்  கதாபாத்திரமும் பிடித்துப்போனதாலும் இதுவரை தான் ஏற்றிராத கதாபாத்திரமாக இருந்ததாலும் நடிக்க ஒப்புக்கொண்டார்.
 
அவதார வேட்டை கடந்த வெள்ளிக்கிழமை பிப்ரவரி 8ம் தேதி வெளிவந்து நல்ல வரவேற்பைப்பெற்றது.மேலும் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரமும் ,இறுதிக்காட்சியில் வரும்  சண்டை காட்சியும் மிகுந்த வரவேற்பைப்பெற்றது.இந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பால்  இனி வரும் காலங்களில் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள கதைக்கு முக்கியத்துவம் தரவுள்ளதாக கூறியுள்ளார்.
 

 

Share.

Comments are closed.