‘தேவ்’ படத்தின் முதல் பாடலின் ஆடியோ இன்று வெளியீடு

0

 164 total views,  1 views today

கார்த்தி நடிக்கும் ‘ DEV’ படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில், இன்று ‘ஹாரிஸ் ஜெயராஜ்’ இசை மழையில் அப்படத்தின் ‘அனங்கே’ என்று தொடங்கும் முதல் ஆடியோ பாடல் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிகப்படியான பார்வையாளர்களால் கேட்கப்பட்டது. தாமரையால் எழுதப்பட்ட பாடல் வரிகள் இளசுகளை கவரும் வகையில் உள்ளது. ஹரிஹரன், பரத் சுந்தர், திப்பு, க்ரிஷ், கிறிஸ்டோபர், அர்ஜுன் சாண்டி மற்றும் சரண்யா கோபிநாத் ஆகியோர் பாடியுள்ளனர்.
 
இப்பாடல் காட்சி சுமார் 6 நிமிட நேரம் கொண்ட பாடலாக உருவாகி வரும் இப்பாடல் அனைவரையும் ஆட்டம் போட வைக்கும் மற்றும் இக்காலகட்டத்தின் ரசிகர்களுக்கேற்ற வகையில் இருக்கும்.
 
‘தேவ்’ படம் ஆக்ஷன், வீரம், காதல் அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். நாயகன், நாயகியாக கார்த்தியும், ரகுல் ப்ரித் சிங்கும் நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், விக்னேஷ், அம்ருதா, கார்த்திக் முத்துராமன், நிக்கி கல்ராணி, ரேணுகா, வம்சி கிருஷ்ணா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
 
ஒளிப்பதிவு R.வேல்ராஜும், படத்தொகுப்பை ரூபனும் ஏற்றிருக்கிறார்கள். ராஜீவன் தயாரிப்பு மேற்பார்வையிடுகிறார். சண்டை பயிற்சி அன்பரிவ் மேற்கொள்கிறார். நடன பயிற்சியை தினேஷும், ஷோபியும் கவனித்துக் கொள்கிறார்கள். தயாரிப்பு நிர்வாகத்திற்கு KV துரை பொறுப்பேற்றிருக்கிறார்.
 
இப்படத்தை ரஜாத் ரவிஷங்கர் எழுதி இயக்க எஸ்.லக்ஷ்மனின் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
Share.

Comments are closed.