
சயின்ஸ் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ’கைமேரா’!
நடித்த கதாபாத்திர பாதிப்பில் இருந்து மீள முடியாமல் மருத்துவ சிகிச்சை பெற்று மீண்ட ‘கைமேரா’ படத்தின் ஹீரோ!
பரமு, செல்பிஷ் படங்களை இயக்கிய மாணிக் ஜெய்.N இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் ‘கைமேரா’.
‘வச்சுக்கவா’ படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் ‘பரமு’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக மாறினார்.
தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகி வரும் செல்பிஷ் என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கைமேரா என்கிற படத்தை தயாரித்து, இயக்கி முடித்துள்ளார் மாணிக் ஜெய்.
இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார்.. மாறுபட்ட வேடங்களில் தாரை கிருஷ்ணன், ரஞ்சித் குமார் மற்றும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் மாணிக் ஜெய் நடித்துள்ளனர்..
கதையின் நாயகிகளாக சௌமியா, கிருஷ்ண நந்து, ஞானேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேர் நடித்திருக்கின்றனர்..
மனித உடம்புக்கு...