கிறிஸ்மஸ் வெளியீடாக வரும்மோகன்லாலின் ” பரோஸ்”!
மோகன்லாலின் " பரோஸ்" திரைப்படம், டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று உலகமெங்கும் பல இந்திய மொழிகளில் வெளியாகிறது !
மோகன்லாலின் " பரோஸ்" திரைப்படத்தின் தமிழ் டிரெயலர் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது !
Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான
" பரோஸ்" , வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்கும் இப்படம், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
பரோஸ் எனும் பூதத்திற்கும், ஒரு பெண் குழந்தைக்கும் உள்ள உறவை ஃபேன்டஸி கலந்து, அனைவரும் ரசிக்கும் வகையில், பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மோகன்லால்.
மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிக...