Monday, December 2

News

தமிழகத்தில் அல்லு அர்ஜுனின் அனல் பறக்கிறது

தமிழகத்தில் அல்லு அர்ஜுனின் அனல் பறக்கிறது

News
தனது சீரிய முயற்சியாலும், அபாரமான திறமையாலும் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அல்லு அர்ஜுன் , என் பேரு சூர்யா என் வீடு இந்தியா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர உள்ளார். நாளை , மே 4ஆம் தேதி வெளி வர உள்ள இந்த படத்தை திரை இட திரை அரங்கு உரிமையாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. " அல்லு அர்ஜுன் படங்கள் எப்போதும் அனல் பறக்கும். திரை அரங்குகள் திரை துறை வேலை நிறுத்ததுக்கு பிறகு வெகு ஜனங்களை கவரும் ஒரு ஜனரஞ்சகமான படத்தை தேடி வந்த. மக்களை கவரும் அனைத்து அம்சங்களும் ஒருங்கே பெற்ற "என் பேரு சூர்யா என் வீடு இந்தியா" அவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும்.இதுவரை நாங்கள் 207 காட்சிகள் உறுதி செய்து இருக்கிறோம். தமிழ் ரசிகர்கள் இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு தருவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை" என்கிறார் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளி இடும் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தலைவர் பி சக்திவே...
நூறாண்டுகளில் காவிரி நீர் மூன்றில் ஒருபங்காய் சுருங்கிவிட்டது – கவிஞர் வைரமுத்து கண்டனம்

நூறாண்டுகளில் காவிரி நீர் மூன்றில் ஒருபங்காய் சுருங்கிவிட்டது – கவிஞர் வைரமுத்து கண்டனம்

News
தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தொல்காப்பியர் குறித்த ஆய்வுக்கட்டுரையைக் கவிஞர் வைரமுத்து நேற்று அரங்கேற்றினார். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் விழாவுக்குத் தலைமை வகித்தார். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார். நூறாண்டுகளில் காவிரி நீர் மூன் றில் ஒருபங்காய்ச் சுருங்கிவிட் டது என்று கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்தார். அவர் உரை விவரம் வருமாறு : தொல்காப்பியம் கட்டிக்கொடுத்த கட்டுமானத்தின்மீதுதான் மூவாயிரம் ஆண்டு நீண்ட தமிழ் நின்று நிலைகொண்டிருக்கிறது. எத்தனையோ அரசு அதிகாரங்களும் ஆட்சி அதிகாரங்களும் தோன்றித் தோன்றி மறைந்திருக்கின்றன. ஆனால் தொல்காப்பியத்தின் எழுத்து – சொல் – பொருள் என்ற மூன்று அதிகாரங்களும் இன்றுவரை அழியாமல் தமிழை ஆண்டுகொண்டிருக்கின்றன. 68 ஆண்டுகொண்ட இந்திய அரசமைப்புகூட 101 முறை திருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முற்...
இத்தாலிய தூதரகத்தில் ஏ.பி.ஸ்ரீதரின் ஓவியங்கள்

இத்தாலிய தூதரகத்தில் ஏ.பி.ஸ்ரீதரின் ஓவியங்கள்

News
உலக அளவில் ஓவியங்களின் மீது காதல் கொண்டவர்களுக்கு அன்று முதல் இன்று வரை எப்போதுமே நீங்காத வியப்பைத் தந்திருப்பவர் லியானர்டோ டா வின்சி. அவரது தூரிகையிலிருந்து பிறந்த “மோனாலிசா” தான் இன்றளவிலும் இந்தப் பிரபஞ்சத்திற்கான கனவு அழகி. சற்று ஏறக்குறைய டா வின்சியின் ஓவியங்களுக்கு நிகராக ஒருவரது ஓவியங்கள் பேசுகிறது என்றால் அது நிச்சயம் ரவி வர்மாவின் ஓவியங்கள் தான். உலகோர் மத்தியில் இந்தியாவின் கலைப் பண்பாட்டை எடுத்துக் கூறும் ஒப்பற்றச் சான்றுகளாக நிலைத்திருக்கின்றன அவர் தீட்டி வைத்து விட்டுப் போன அத்தனை ஓவியங்களும். இப்படி உலகையே தன் வயப்படுத்தியிருக்கும் இரு துருவங்களின் ஓவியங்களைக் குழைத்து, புதியதோர் சித்திரமாக்கினால் அது எப்படி இருக்கும்?. இருவேறு நேரெதிர் கலாச்சாரம் ஒன்றாய் சேர்ந்து உயிர் பெருகையில் அது தரும் பிரமிப்பு எத்தகையதாய் இருக்கும்?. நினைக்கவே விழிகளை விரியச் செய்யும் இச்சிந்தனைக்கு...
கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன்

கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன்

News
திரையரங்கில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள், "இது முழுக்க முழுக்க ஒரு  எண்டர்டெயினர் படம்" என்று சொல்லி விட்டு, மகிழ்ச்சியோடும், கொண்டாட்டத்தோடும் வீட்டுக்கு போகும்போது அப்படி ஒரு படத்தை எடுத்து, அவர்களுக்கு வழங்கிய படக்குழுவுக்கு அதை விட பெரிய மகிழ்ச்சி என்னவாக இருக்க முடியும். இதுநாள் வரையில் ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா, இயக்குனர் ராஜேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது துறைகளில் முழுக்க பொழுதுபோக்கு படங்களை வழங்கியவர்கள். தற்போது இந்த மூன்று பேரும் ஒரு படத்தில் இணைவது ட்ரிபிள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமையப் போவது உறுதி. ஸ்டுடியோக்ரீன் ப்ரொடக்‌ஷன் நம்பர் 9 தற்போதைக்கு, சிவகார்த்திகேயன் 13 #SK13 என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் சம்பிரதாய பூஜையுடன் இன்று துவங்கியது. இந்த படத்தை பற்றி தயாரிப்பாளர் கேஈ ஞானவேல்ராஜா கூறும்போது, "ராஜேஷ், சிவகார்த்திகேயன் போன்ற ஆளுமைகள் ஒரு படத்தில் இண...
Best of Indian and International talent teams up in Abu Dhabi for new film ‘Saaho’

Best of Indian and International talent teams up in Abu Dhabi for new film ‘Saaho’

News
• Incredible line-up of talent in Indian movie illustrates the global appeal of Emirate • ‘Saaho’ is third international production to be shot in Abu Dhabi this year • twofour54 to provide full production services Abu Dhabi, 2 May 2018 – Top talent from three of the world’s leading film hubs have converged in Abu Dhabi for new action movie ‘Saaho’, proving that the Emirate is truly at the centre of the world’s film industry. Pan India superstar Prabhas, Bollywood actress Shraddha Kapoor and Hollywood stunt legend Kenny Bates are all part of the cast and crew of ‘Saaho’, which is currently shooting at locations across Abu Dhabi. H.E. Maryam Eid AlMheiri, CEO of Media Zone Authority – Abu Dhabi and twofour54, said: “We are no strangers to international productions in Abu Dhabi, howe...
தமிழ்நாடு குறும்படங்கள் போட்டியில் சிறந்த இசையமைப்பாளராக தேர்வான ஜாட்ரிக்ஸ்

தமிழ்நாடு குறும்படங்கள் போட்டியில் சிறந்த இசையமைப்பாளராக தேர்வான ஜாட்ரிக்ஸ்

News
பிரபல டைரக்டர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ்குமார் நடித்து இயக்கிய குறும்படம் ‘மேகம் செல்லும் தூரம்’ தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகி வெளிவந்த இந்த படத்துக்கு 17 வயது நிரம்பிய இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ் இசையமைத்திருந்தார். சரண் ஒளிப்பதிவு செய்திருந்தார். மா.மோகன் பாடல் எழுதியிருந்தார். இந்த குறும்படம் திரையுலகினர் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் நடிகர் விஷால், நடிகர் உதயநிதி ஸ்டாலின், டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.பி.ஜனநாதன், சசிகுமார் உள்ளிட்டோர் படத்தைப் பார்த்து விக்னேஷ்குமார் நடிப்பும், ஜாட்ரிக்ஸின் இசையும் மா.மோகன் எழுதிய பாடல் வரிகளும், சரண் ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்ததாக பாராட்டினர். இந்த குறும்படத்தை இதுவரை 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யூடியூப்பில் பார்த்து பாராட்டி உள்ளனர். இந்...
“மிரட்டலுக்குப் பயப்படாதவன் நான்…” – எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.!

“மிரட்டலுக்குப் பயப்படாதவன் நான்…” – எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.!

News
“சர்ச்சை கதை எடுத்திருப்பதால் இதற்காக எத்தகைய மிரட்டல்கள் வந்தாலும் அது பற்றி எனக்குப்  பயமில்லை…” என்று ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் அறிமுக விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார். சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின்  அடிப்படையில்   உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’. இந்தப் படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்க  அவரது மனைவியாக ரோகிணி நடிக்கிறார். மற்றும் பிரகாஷ் ராஜ் , ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன் ராம் என்று பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் வருகிறார். புதுமுக இயக்குநரான விக்கி படத்தை இயக்கியிருக்கிறார்.  இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா இன்று மதியம் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் படத்தைப் ...
சென்னையில் ஒரு ஊட்டி ; கோடை கொண்டாட்டத்தை துவங்கி வைத்த  இந்துஜா..!

சென்னையில் ஒரு ஊட்டி ; கோடை கொண்டாட்டத்தை துவங்கி வைத்த இந்துஜா..!

News
கோடை விடுமுறை துவங்கிவிட்டது. சென்னையை பொறுத்தவரை கோடை விடுமுறை என்றாலே தீவுத்திடலில் பிரமாண்டமாக நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சி தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். அந்தவகையில் சென்னையின் இந்த வருட கோடை விடுமுறை கொண்டாட்டமாக SSM பில்டர்ஸ் & புரமோட்டர்ஸ் தீவுத்திடலில் நிறுவியுள்ள  வாட்டர் வேர்ல்டு (Water World ) தான் இருக்கப்போகிறது.. இதற்கான துவக்கவிழா நேற்று சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மேயாத மான், மெர்க்குரி படங்களில் நாயகியாக நடித்த இந்துஜா, திரு. பி. வில்சன் - சீனியர் கவுன்சில் & பார்மர் அட்வோகேட் ஜெனரல்(Senior Counsel and Former Advocate General), திரு. தியாகராஜன் -  SSM பில்டர்ஸ் & புரமோட்டர்ஸ் மற்றும் திரு. போஸ் பாண்டி - திரைப்பட தயாரிப்பாளர்  ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய இசையமைப்பாளரும் விகோஷ் மீடியா நிறுவனத்த...
SIFWA வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியது…

SIFWA வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியது…

News
தென்னிந்திய  திரைத்துறை பெண்கள் மையத்தின் வெளியீட்டு விழா நேற்று மாலை  நடைபெற்றது. இதில் பா.ரஞ்சித் , பி.சி.ஸ்ரீராம் , சத்யராஜ் , ரேவதி , அதிதி மேனன் , ரோகினி, பாலாஜி சக்திவேல்  , புஷ்கர் காயத்திரி , அம்பிகா , சச்சு , சரோஜா தேவி , ப்ரேம் , விவேக் பிரசன்னா , சுளில் குமார்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியது :-   சாஸ்திரமும் , சடங்கும் , பண்பாடும் , கலாச்சாரமும் பெண்களை அடிமைகளாக தான் வைத்துள்ளது. இவற்றை பாதுகாக்க தான் மதம் மற்றும் ஜாதி போன்ற விஷயங்கள் இங்கே உள்ளது. இவற்றிலிருந்து பெண்கள் வீடுபெற வேண்டுமென்றால் பெண்கள் அனைவரும் தந்தை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானால் என்ற புத்தகத்தை படிக்க வேண்டும். பெண்கள் ஏன் அடிமையாக்கப்பட்டார்கள் என்பது தெரிந்தால் தான் அவர்களால் அதை விட்டு வெளியே வர முடியும் என்றார் நடிகர் சத்யராஜ். SIFWA இணையதளம் மற்றும் "திரைய...