காதலின் பொன் வீதியில்
ஹாலிவுட்டிலிருந்து கோலிவுட்டிற்கு
பூணம் ஷா, பிரியங்கா ஷா - இரட்டையர் பெண் நடன இயக்குனர்களை களமிறக்கும்
"காதலின் பொன் வீதியில்" படக்குழு
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பண்முகம் கொண்ட ஆக்ஷன் கிங் அர்ஜுன் முதன்முறையாக ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தை தனது ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நெஷனல் சார்பாக கதை திரைக்கதை வசனம் எழுதி பிரம்மாண்டமாக தயாரித்து இயக்குகிறார்.
இளமை துடுக்கான வேடத்தில் ஜஸ்வர்யா அர்ஜுன் நடிக்க, நடிப்பு கலையை முறையே பயின்ற சந்தன் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் புது வரவாக ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும் கலக்கிய இளம் இரட்டையர் நடன இயக்குனர்கள் பூணம் ஷா, பிரியங்கா ஷா இளமை ததும்பும் ஒரு பாடலுக்கு நடனம் அமைக்கவுள்ளனர்.
பாரம்பரிய பரதநாட்டிய நடனத்துடன் மேற்கித்திய நடனத்தை உட்புகுத்தி புதிய நடன அசைவுகளை உருவாக்கியதில் வித்தகர்களான இவர்கள் ...