தர்ஷன் நடிக்கும் புதிய படம்…

0

 530 total views,  1 views today

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரித்த ‘கனா’ படத்தில் அப்பாவியான புன்னகை, யதார்த்தமான நடிப்பு, பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம் போன்றவை மூலம் அனைவரின் மனதிலும் பதிந்தவர் நடிகர் தர்ஷன். இந்த படத்தையும், இதை வெற்றி படமாக்க உழைத்த ஒவ்வொரையும் மக்கள் பாராட்டி வருகிறார்கள். 
நடிகர் தர்ஷன் மட்டும் விதிவிலக்கல்ல. தர்ஷன் தற்போது இளைஞர்கள் மட்டுமல்லாமல், அனைத்து வயதினருக்கும் பிடித்த ஒருவராக மாறியிருக்கிறார். இந்நிலையில் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP & ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கான கலை அரசு மற்றும் சுரேகா நியாபதி தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார். ‘ப்ரொடக்‌ஷன் நம்பர் 1’ என்று தற்காலிகமாக தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த படத்தை ஹரிஷ் ராம் LH இயக்குகிறார். அனிருத் மற்றும் விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இந்த படத்துக்கு இசையமைப்பது அனைவரின் கவனத்தையும் படத்தின் மீது திசை திருப்பியிருக்கிறது.
 
நகைச்சுவையான குடும்ப சாகச  பின்னணியில் அமைந்திருக்கும் இந்த படத்தின் நாயகன் கதாபாத்திரத்துக்கு தர்ஷன் மிக பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியதால் தயாரிப்பாளர்கள் அவரை நாயகனாக்கி இருக்கிறார்கள். “குறிப்பாக கனாவில் அவரது குளிர்ச்சியான, எளிமையான, கவரும் நடிப்பை பார்த்த பிறகு, இந்த கதாபாத்திரத்துக்கு அவர் உயிர் கொடுக்க அவர் தான் சரியாக இருப்பார் என்று உணர்ந்தோம்” என்கிறார் இயக்குனர் ஹரிஷ் ராம் LH. அறிமுக இயக்குனரான இவர் இதற்கு முன்பு இயக்குனர் துரை செந்தில்குமாரின் எதிர் நீச்சல், காக்கி சட்டை மற்றும் கொடி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
 
தங்களின் மாயாஜால இசையால் இளைஞர்களை மயக்கியிருக்கும் அனிருத் மற்றும் விவேக்-மெர்வின் இசையமைத்திருப்பதால், இந்த படம் ஒரு இசை விருந்தாக இருக்கும் என தெரிகிறது. ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் உதவியாளர் நரேன் இளன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கலைவாணன் (படத்தொகுப்பு), நூர் (ஸ்டண்ட்ஸ்), ராம் ராகவ் மற்றும் பிரபாகரன் AR (உரையாடல்), வாசுகி பாஸ்கர் & பல்லவி சிங் (ஆடை வடிவமைப்பு), ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (ஒலி வடிவமைப்பு) டி உதயகுமார் & வினய் ஸ்ரீதர் (ஆடியோகிராஃபி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். 
 
இந்த படத்தில் நிறைய VFX காட்சிகள் இருப்பதால், VFX உலகின் மிகப்பெரிய திறமையாளர்களான வில்லவன் கோதை G, (VFX கிரியேட்டிவ் இயக்குநர்), ரெங்கராஜ் J (VFX இயக்குனர்) மற்றும்  சந்திரமோகன் J (VFX தயாரிப்பாளர்) ஆகியோரை படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

 

Share.

Comments are closed.