ஜெய் நடிப்பில் உருவாகும் புதிய படம் பிரேக்கிங் நியூஸ்.!

0

 996 total views,  1 views today

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜெய் நடிப்பில் உருவாக உள்ள புதிய படமான பிரேக்கிங் நியூஸ் என்ற படத்தின் பூஜைகள் சென்னையில் உள்ள AVM ஸ்டூடியோஸ் நடைபெற்றது.

ஆண்ட்ரூ பாண்டியன் இயக்க உள்ள இந்த படத்தை ராகுல் பிலிம்ஸ் சார்பாக கே. திருக்கடல் உதயம் தயாரிக்கிறார்.

படத்தின் நாயகியாக தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமான பானு அறிமுகமாக உள்ளார்.மேலும் இப்படத்தில் தேவ்கில், வேதாளம் வில்லன் ராகுல் தேவ், மந்திரா பேடி, இஷா கோபிகா, பழ. கருப்பையா, ராதா ரவி, கிருதுவாரகீஷ் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர்.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படத்தில் புதிய தொழில் நுட்பத்துடன் 90 நிமிடங்கள் விசுவல் எபோர்ட்டில் இப்படம் உருவாக உள்ளது.

இயக்குனர் : ஆண்ட்ரு பாண்டியன்
ஒளிப்பதிவு : ஜானி லால்
இசை : விஷால் பீட்டர்
ஆர்ட் : மகேஷ் N.M
ஸ்டண்ட் : ஸ்டன்னர் சாம்
நடனம் : ராதிகா, VFX சூப்பர்வைசர் தினேஷ் குமார்.

Share.

Comments are closed.