Thursday, June 19

JSK PRIME MEDIA OTTயில் வெளியாகும் ‘அண்டாவ காணோம்’!

Loading

IOS , Android, Fire Stick,Smart Tv, Web Browser போன்ற‌வ‌ற்றில் எளிமையான‌ முறையில் கிடைக்கும்வ‌கையில் Jsk Prime Media புதிய‌ OTT த‌ள‌ம் அறிமுக‌மாகிற‌து. த‌ங்க‌ மீன்க‌ள், த‌ர‌ம‌னி ம‌ற்றும் எண்ண‌ற்ற‌ ப‌ட‌ங்க‌ளை தயாரித்த‌ தயாரிப்பாள‌ர் J Satish Kumar Jsk Audio ம‌ற்றும் Jsk Prime YouTube Channel வெற்றியை தொட‌ர்ந்து அவரின் அடுத்த‌ முய‌ற்சியாக JSK PRIME MEDIA OTT வெளியாகிற‌து. இதில் நீங்க‌ள் எப்போதும் பார்க்கும் வ‌கையில் 50 திரைப்ப‌ட‌ங்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ இட‌ம்பெறும்.அதில் ம‌க்க‌ள் நீங்க‌ள் விரும்பிய‌ திரைப்ப‌ட‌ங்க‌ளை சந்தாதார‌ர் க‌ட்ட‌ண‌மின்றி இல‌வ‌ச‌மாக‌ பார்க்க‌லாம். அதும‌ட்டுமில்லாது புத்த‌ம் புதிய‌ திரைப்ப‌ட‌ங்க‌ளும் வெளியாக‌வுள்ள‌ன‌.
புதிதாக‌ வெளியாகும் திரைப்ப‌ட‌ங்க‌ளை ம‌ட்டும் அந்த‌ந்த‌ திரைப்ப‌ட‌ங்க‌ளின் க‌ட்ட‌ணங்க‌ளில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பார்த்து ம‌கிழலாம்.அதில் முத‌லாவ‌தாக JSK FILM CORPORATION தாயாரிப்பில் அறிமுக‌ இய‌க்குனர் C வேல்ம‌தி இய‌க்க‌த்தில் அண்டாவ காணோம் திரைப்ப‌ட‌ம் வெளியாக‌ உள்ள‌து. இத்திரைப்ப‌ட‌ம் முழுக்க‌ முழுக்க‌ கிராம‌த்தை மைய‌மாக‌க்கொண்டு ஒரே நாளில் ந‌ட‌க்கும் ந‌கைச்சுவை க‌லந்த‌ குடும்ப திரைப்ப‌டமாகும். ப‌ட‌த்தில் ஷ்ரேயாரெட்டி க‌தாநாய‌கியாக‌ ந‌டித்துள்ளார். இத்திரைப்ப‌ட‌ம் ஆகஸ்ட் 28ம் தேதி உல‌க‌மெங்கும் வெளியாகிற‌து.இப்பட‌த்தை குடும்ப‌த்தோடு பார்க்க‌ 100 ரூபாய் க‌ட்ட‌ண‌ம் நிர்ண‌யிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அதும‌ட்டுமில்லாது அனைவ‌ரும் பார்க்கும்வ‌கையில் ப‌ல‌ திரைப்பட‌ங்க‌ளை வெளியிட JSK PRIME MEDIA முடிவு செய்துள்ள‌து.