Saturday, December 14

K.E. ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் கஜினிகாந்த்  படத்தில் ஆர்யா

Loading

STUDIOGREEN சார்பில்  K.E. ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும்  படத்தில் ஆர்யாநடிக்கவுள்ளார். இப்படத்தை ஹர ஹர மஹா தேவகி ,மற்றும் இருட்டு அறையில்முரட்டு குத்து படங்களை இயக்கிய சன்தோஷ் P ஜெயக்குமார் இயக்குகிறார்.

இப்படத்தின் பூஜை இன்று காலை (29112017) இனிதே நடைபெற்றது. இப்படத்தில்ஆர்யாவுக்கு ஜோடியாக வனமகன்” சாயிஸா நடிக்கிறார்.  மேலும் பாலமுரளி பாலுஇசையமைக்க, பல்லு அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார்பிரசன்னா G.K படத்தொகுப்பைகவனிக்க, கோபி ஆனந்த் கலை இயக்கத்துக்கு பொறுப்பேற்றிருக்கிறார்.

டிசம்பர் முதல் வாரத்தில்  படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இந்தப் படத்துக்கு கஜினிகாந்த் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.