Comics கதை புத்தக கதாபாத்திரங்களில், திரை வடிவில் வெகு வெற்றிகரமாக உலா வந்த கதாபாத்திரம், ‘Wolverine’ கதாபாத்திரம்! ‘Logan’ என்கிற இந்த திரைப்படம், X-Men தொடர் பாட வரிசையில் 10வது ஆகவும், Wolverine பாட தொடரில் 3வது ஆகவும் திகழ்கிறது. X-Men Origins: Wolverine 2009 இல் மற்றும் The Wolverine 2013 யிலும் வெளிவந்தது நினைவிருக்கும்.
Academy விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்ட Hugh Jackman மீண்டுமொரு முறையும், இறுதியாகவும் Wolverine வேடத்தில் தோன்ற, முந்தைய The Wolverine படத்தை இயக்கியிருந்த James Mangold இதனை இயக்கியுள்ளார். 2000 ஆம் ஆண்டு வெளிவந்த Bryan Singer இன் X-Men படத்தில் தான் முதல் முறையாக Hugh Jackman Wolverine வேடத்தில் தோன்றி கலக்கியிருந்தார்! 10 ஆவது முறையாக, அதே வேடத்தில் இப்படத்தில் தோன்றியுள்ளார்!
இதுவரை வெளிவந்த அந்த தொடர் படங்களில் எல்லாம், Wolverine இன் அதிசய சக்திகள் தான் பறைசாற்ற பட்டன! மனித நேயத்திலும் Wolverine சற்றும் குறைந்தவர் அல்ல என்பதை இப்படம் நிலைநாட்டுகிறது!
இதர Wolverine படங்களில் இருந்து மாறுபட்டு, இந்த விசித்திர மனிதனின் அபார சக்திகளை விட உயர்ந்த மனித நேயத்தை எடுத்து சொல்கிறது, இப்பதிப்பு!
இப்பட கதை நிகழும் ஆண்டு, 2029!
தனது வழக்கமான வாழ்க்கை முறையிலிருந்து விலகி, Mexico வீண் எல்லை பகுதியில் குறைந்த பணத்திற்கு வண்டி ஓட்டி வாழ்ந்து வருகிறார், Logan! உடல் நலிவுற்ற Charles Xavier (Patrick Stewart) மற்றும் Caliban (Stephen Merchant) ஆகிய இருவரும் அவரது உற்ற சாகாகள்!
சற்றே விலகி வாழ நினைக்கும் Logan னுக்கு எதிர்பாராத விதமாக புதியதொரு கடமை அழைக்கிறது! தன்னை போலவே விசேஷ சக்திகள் கொண்ட Laura (Dafne Keen) என்கிற ஓர் இளம் பெண்ணிற்கு பாதுகாப்பு தந்து காக்க வேண்டிய பொறுப்பு வந்துசேர்கிறது! Donald Pierce (Boyd Holbrook) என்கிற ஒருவன், முக்கிய காரணம் ஒன்றிர்காக Laura வை துரத்துகிறான்! அமைதியாக சென்று வரும் தனது பயணத்தில் புதிய திருப்பம் வந்து விட்டதை உணர வேண்டிய ஒரு நிலை Logan னுக்கு! அதிரடி action ஆரம்பமாகிறது!
John Mathieson படத்தின் ஒளிப்பதிவை கையாண்டு உள்ளார். Marco Beltrami இசை அமைத்துள்ளார். Michael Mc Cusker படத்தை தொகுத்துள்ளார். Daniel Orlandi உடை அலங்காரங்களை கையாண்டு உள்ளார். படத்தின் ஓட்ட் நேரம் 135 நிமிடங்கள்.