இந்தியா பாகிஸ்தான் எல்லையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட “மிட்டி”இந்தி குறும்படம்

0

 313 total views,  1 views today

இந்தியா பாகிஸ்தான் எல்லையை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட mitti (மிட்டி) இந்தி குறும்படம் .
இணையத்தில் வைரலாக பரவி வருகிறது .
சமீபத்தில் நடைபெற்ற காஷ்மீர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு இணையத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட பகிரப்பட்ட இந்த குறும்படத்தை இயக்கியவர்கள் சென்னையை சேர்ந்த இளைஞர்கள் இந்தியில் mitti என்றால் தமிழில் மண் என்று அர்த்தம்.

இந்திய மண்ணும் பாகிஸ்தான் மண்ணும் போரினால் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலை மிக அழகாக எதார்த்தமாக ஒரு குறும்படத்தில் படம்பிடிக்கப்பட்டு இன்று இணையத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது .

இந்த இந்தி mitti குறும் படத்தை இயக்கியவர்கள் முதல் இந்த படத்தில் வேலை செய்த அத்தனை பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் .

இந்த படத்தை இயக்கிய விக்னேஷ் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் இந்த படத்தின் படப்பிடிப்பை முழுக்க முழுக்க சென்னை அருகில் செங்கல்பட்டு அருகே படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.

படத்தில் இந்திய எல்லைப் பகுதியை தத்ரூபமாக காட்டும் விதமாக இந்த இடங்கள் அமைந்திருக்கிறது. படம் பார்ப்பவர்களை ஆச்சர்யப்பட வைக்கிறது.

ஒரு குறும்படத்தின் மூலம் தன் மண்ணின் மீதும், மக்களின் மீதும் அன்பு வைத்திருப்பவர்களின் உண்மையான வாழ்க்கையை சொல்ல முடியும் என்று இந்த “மிட்டி “குறும்படத்தை இயக்கிய G s விக்னேஷ் கூறுகிறார்.
Screenplay and direction – G.S viknesh
Cinematography and vfx – livi
Editor – Ilayaraja
Art director – Bakiyaraj V

Share.

Comments are closed.