விளம்பர இயக்குனர் பாபு சங்கரின் முதல் தனிப்பாடல்“பேசு“!

0

 24 total views,  1 views today

 

பிரபல விளம்பர இயக்குனர் பாபு சங்கரின் முதல் தனிப்பாடல். “ பேசு “
யூட்யுபில் பேசு என தேடினால் அருவி இசையாய் நம்மை வசீகரிக்கிறது.

நூற்றுக்கணக்கான விளம்பரங்களில்சூர்யா, மாதவன்,மகேஷ் பாபு, நயன்தாரா போன்ற பல நட்ச்சத்திரங்களை பேசி பாடி நடிக்க வைத்த பாபு சங்கரின் முதல் ம்யூசிக்வீடியோ இது.
இதை வினியோகம் செய்பவர் டிவோம்யூசிக்.

கரோனாநோயினால்நிலவும் ஒரு அசாதாரண அழுத்தத்தில்பலரின் எதிர்பார்ப்பு மிகவும் எளிமையானது. காது கொடுத்து கேட்க ஒருவர். இறுகி போன மனதை இறகாக்க அக்கறையோடு ஒரு இதயம்.

நிச்சயமாக அப்படி ஒருவர் உலகத்தில் உங்களுக்காக உண்டு.

அன்பாய், ஆதரவாய்.

பேசு பாடல் சொல்வது இதைத் தான்.

மடமடவென மடை திறந்ததைபோலே மனதில் உள்ளதை சொல்.
உதவிகள் கேட்பதில்தப்பில்லையே.
கவலையை உள்ளே விடாதே
கடல் உள்ளே வந்தால் கப்பல் தாங்காதே

பென்னி, ப்ளாசே, சின்மயி, முகேன்ராவ், சுனிதா சாரதி மற்றும் மதுமிதாபாடியுள்ள இந்த பாட்டை எழுதி, இசையமைத்து, வீடியொவைஇயக்கியவர்பாபுசங்கர்.

கேளுங்கள் இந்த பாட்டை.
கேளுங்கள் உங்களை நாடும்நண்பரின் உள் மனதை.

Share.

Comments are closed.