Produced Nazir Press Release

0

 406 total views,  1 views today

அன்புள்ள பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக நண்பர்களுக்கு,

வணக்கம்.

எனது தயாரிப்பு நிறுவனமான ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த “களவாணி” மற்றும் “எத்தன்” படங்களுக்கு அமோக ஆதரவு அளித்து வெற்றிப்படங்களாக்கிய உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்.

தற்போது பூணம் கவுர் நடிப்பில் மதிவாணன் இயக்கத்தில் “வதம்” எனும் படத்தை தயாரித்து வருகிறேன். இப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது.

மேலும் விரைவில் “களவாணி 2” படத்தைத் தயாரிக்கவுள்ளேன், இந்தப் படத்தில் நடிக்கவுள்ள நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் தெரிவிக்கிறேன். “களவாணி 2” படத்திற்கான படத்தலைப்பின் உரிமையைத் தயாரிப்பாளர் சங்கத்தில் 17/01/2018 அன்று முறையே பதிவு செய்து ஒப்புதல் பெற்றுள்ளேன்.

எனக்கும் எனது தயாரிப்பு நிறுவனத்திற்கும் உங்களது ஆதரவைத் தொடர்ந்து நல்கும்படி அன்புடன் கேட்டுகொள்கறேன்.

அன்புடன்,

நசீர்

 

Share.

Comments are closed.