தயாரிப்பாளர் சி.வி.குமாரின் சீர் மிகு சிறப்புத் திட்டம்!

0

 142 total views,  1 views today


டிஸ்னி ஹாட்ஸ்டார் , அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் ‘ஓவர் தி டாப்’ என வருணிக்கப்படும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் திரையிடல் தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றன. மில்லியன் டாலர்களில் வருவாய் ஈட்டும் இந்த வெளிநாட்டுத் தளங்களை ஆதரிப்பதில் தமிழர்களுக்கு நிகர் தமிழர்கள் தான். ஏனென்றால் வயிறு காய்ந்திருந்தாலும் தங்கள் கண்களுக்கும் கருத்துக்கும் சோறிட அவர்கள் மறப்பதில்லை. அதனால் தான் சினிமா தொழில் தமிழகத்தில் ஆண்டுக்கு குறைந்தது 1500 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் பொழுதுபோக்குச் சந்தையாக இருந்து வருகிறது.
திரையரங்குகள் முற்றாக முடங்கியிருக்கும் இந்த நேரத்தில் அமேசான், டிஸ்னி ஹாட் ஸ்டார் ஆகிய நிறுவனங்கள் இன்னும் தங்கள் பிடியை இறுக்குகின்றன. இந்த கரோனா ஊரடங்கில் இணையத் திரைக்கு கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்து தமிழ்த் திரையைச் சேர்ந்த ஒருவர் கூட ஓடிடி தளம் ஒன்றைத் தொடங்க முன்வரவில்லையே என்ற ஆதங்கம் எழுந்ததை மறுக்கமுடியாது. சினிமாவில் அழுந்தத் தடம் பதித்த பல தயாரிப்பாளர் ஓடிடி தொடங்கப்போவதாக அறிவித்ததுடன் சரி. எதுவும் செயல்வடிவம் பெறவில்லை.
ஆனால் திருக்குமரன் எண்டெர்டெயிண்மெண்ட் படநிறுவனத்தின் அதிபர், தயாரிப்பாளர், இயக்குநர் சி.வி.குமார் ‘ரீகல் டாக்கீஸ்’ என்ற பெயரில் பிரம்மாண்டமாக, தரமாக தமிழகத்திலிருந்து முதல் சர்வதேச ஓடிடி தளத்தை வரும் 8-ம் தேதி தொடங்குகிறார்.
தேர்ச்சியும் தரமும் மிக்க சினிமா ரசனை, தயாரிப்பாளர்களுக்கு இருந்தால் மட்டுமே தமிழ் சினிமாவில் தரமான பொழுதுபோக்கு சினிமாக்கள் வெளிவரும் என்பதற்கு சி.வி.குமார் மிகச்சிறந்த உதாரணம். இவர் தயாரித்த, இயக்கிய, வெளிட்ட அத்தனை படங்களும் ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளையடித்தவை. தரமான பொழுதுபோக்கினை நாடிவரும் ரசிகர்களை இவர் முட்டாள்களாக நினைப்பதில்லை. டிக்கெட்டுக்கு அவர்கள் தரும் பணத்தை மதிப்பதில் உளப்பூர்வமான பொறுப்பு மிக்கவர். அதனால் தான் புதுமையாக இருந்துவிடாதா என்ற ஏக்கத்தைச் சுமந்தபடி திரையரங்கு வரும் ரசிகனை சிறிதும் ஏமாற்றமடையச் செய்யாத ‘அட்டக்கத்தி’, ‘பிட்சா’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘முண்டாசுபட்டி’, ‘சரபம்’, ‘எனக்குள் ஒருவன்’, ‘இன்று நேற்று நாளை’, ‘இறுதி சுற்று’, ‘காதலும் கடந்து போகும்’, ‘இறைவி’, ‘அதே கண்கள்’ ஆகிய படங்களைத் தயாரித்துத் தன்னை தனித்து அடையாளம் காட்டினார். அதேபோல, அவர் இயக்கிய ‘மாயவன்’, ‘கேங்கஸ் ஆஃப் மெட்ராஸ்’ படங்களின் கதைக் களமும் அவற்றை அவர் தந்த விதமும் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றன.
அப்படிப்பட்ட வெற்றிகரமான ஒருவர் ‘ஓடிடி’ துறையில் கால் பதிப்பது தமிழர்களுக்குப் பெருமை. அதை ஆராவாரத்துடன் வரவேற்போம். ஒரு தமிழரின் சாதனையை ஊக்கப்படுத்துவோம்.

Share.

Comments are closed.

CLOSE
CLOSE