ஒத்தசெருப்பு சைஸ் நம்பர் 7. தமிழில் முதல்முறையாக அனைவரும் பாராட்டும் வகையில் மிக பெரிய முயற்சியை திரு பார்த்திபன் எடுத்துள்ளார். தனது எல்லா படைப்புகளிலும் புதுமைக்கு புதிய பாதை வகுக்கும் பார்த்திபன், இந்த படத்தின். வழியாக நலிந்து வரும் சினிமா தொழிலுக்கு ஒரு ஆரோக்கியமான பாதையை தனது பாணியில் காண்பித்ததற்கு பாராட்டுகள். ஏழை தந்தை ஒருவன் நோயாளி குழந்தையுடனும், சமுதாயத்தில் நிலவும் வக்கிரங்களை வலியுடன் எதிர்கொண்டு, பல கேரக்டர்களை அவற்றின் தன்மையை தனி மனிதராக தனது நடிப்பு திறன் மூலமே காட்டி வியப்பில் ஆழ்த்துகிறார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா உலக அளவில் பேசப்படும். முதலில் தமிழ்நாட்டில் பேசப்பட வேண்டும். மனம் திறந்த வாழ்த்துகள்.” என்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான திரு R.சரத்குமார் அவர்கள் கூறினார்.