SIFWA வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியது…

0

 197 total views,  1 views today

தென்னிந்திய  திரைத்துறை பெண்கள் மையத்தின் வெளியீட்டு விழா நேற்று மாலை  நடைபெற்றது. இதில் பா.ரஞ்சித் , பி.சி.ஸ்ரீராம் , சத்யராஜ் , ரேவதி , அதிதி மேனன் , ரோகினி, பாலாஜி சக்திவேல்  , புஷ்கர் காயத்திரி , அம்பிகா , சச்சு சரோஜா தேவி , ப்ரேம் , விவேக் பிரசன்னா , சுளில் குமார்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியது :- 
 சாஸ்திரமும் , சடங்கும் , பண்பாடும் , கலாச்சாரமும் பெண்களை அடிமைகளாக தான் வைத்துள்ளது. இவற்றை பாதுகாக்க தான் மதம் மற்றும் ஜாதி போன்ற விஷயங்கள் இங்கே உள்ளது. இவற்றிலிருந்து பெண்கள் வீடுபெற வேண்டுமென்றால் பெண்கள் அனைவரும் தந்தை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானால் என்ற புத்தகத்தை படிக்க வேண்டும். பெண்கள் ஏன் அடிமையாக்கப்பட்டார்கள் என்பது தெரிந்தால் தான் அவர்களால் அதை விட்டு வெளியே வர முடியும் என்றார் நடிகர் சத்யராஜ்.

SIFWA இணையதளம் மற்றும் “திரையாள்” என்ற காலாண்டு இதழையும் இந்த விழாவில்  வெளியிட்டனர். 

தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் : வைஷாலி சுப்ரமணியன்(தலைவர் ), ஏஞ்சல் சாம்ராஜ் (துணைத்தலைவர் ) , ஈஸ்வரி.V.P (பொது செயலாளர் ) , மீனா மருதரசி.S (துணை செயலாளர் ) , கீதா.S (பொருளாளர் ).

Share.

Comments are closed.