அக்ஷய் குமார் வெளியிட்ட ‘கண்ணப்பா’ டீசர்!
கண்ணப்பாவின் புகழ்பெற்ற கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு காவிய திரைப்படமான ‘கண்ணப்பா’-வுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டீஸர் மும்பையில் நடைபெற்ற சிறப்பு ஊடக நிகழ்வில் வெளியிடப்பட்டது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார், முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சு, இயக்குநர் முகேஷ் குமார் சிங் மற்றும் படக்குழுவினர் இதில் பங்கேற்றனர்.
படத்தின் நிர்வாக தயாரிப்பாளரான வினய் மகேஸ்வரி, வரவேற்புரை நிகழ்த்திய இந்த நிகழ்ச்சியில், திரையிடப்பட்ட கண்ணப்பா பட டீசர், பத்திரிகையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, பக்தி, தியாகம் மற்றும் பிரமாண்டமான வரலாற்று விவரிப்பைப் பற்றிய ஒரு பார்வையை வழங்கும் விதத்தில் இருந்தது.
முகேஷ் குமார் சிங் இயக்கிய மற்றும் எம். மோகன் பாபு தயாரித்த இப்படம், பார்வையாளர்களை பக்தி மற்றும் உணர்ச்சிபூர்வமான பயணத்திற்கு அழைத்துச் செல்லும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை டீசர் பிரதி...









