Tag: anjali

அஞ்சலி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது…
அஞ்சலி, யோகி பாபு மற்றும் விஜய் டி.வி.புகழ் ராமர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று எளிய பூஜையுடன் தொடங்கியது. நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வாழ்த்துகளுடன் இன்று படப்படிப்பு தொடங்கிய இப்படம், ஒரு குறுகிய காலத் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
சோல்ஜர்ஸ் பேக்டரி சார்பில் உருவாகும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் சினீஸ் தெரிவித்ததாவது....
விலா நோகச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளும், விறுவிறுப்பு குறையாத காட்சிகளும் நிறைந்த கதையாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ். ஒரு படைப்பாளி என்ற வகையிலும், ரசிகன் என்ற முறையிலும் இந்தப் படம் எனக்கு பெருமகிழ்ச்சியைத் தருகிறது. முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிகை அஞ்சலியை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்க்கலாம். அஞ்சலியின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை இப்படம் ஏற்படுத்தும் என்றால் மிகையாகாது. இதுவரை அஞ்ச...

அஞ்சலிமீது ஒருதலை காதல் கொள்ளும் யோகிபாபு!
நடிகை அஞ்சலியின் புத்துணர்ச்சியூட்டும் தோற்றமும், திகில் முதல் நாடக அடிப்படையிலான திரைப்படங்கள் வரை பன்முகப்படுத்தப்பட்ட கதைகளில் அவர் நடிப்பதும் தொடர்ந்து அவரை தலைப்பு செய்திகளிலேயே வைத்திருக்கின்றன. கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் பலூன் இயக்குனர் கே.எஸ்.சினிஷ் 'தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி' சார்பில் தயாரிக்கும் ஃபேண்டஸி காமெடி படத்தில் நடிக்க தனது ஆற்றலை வளர்த்துக் கொள்ள தயாராக உள்ளார். கூடுதல் ஈர்ப்பாக யோகிபாபு மற்றும் விஜய் டிவி புகழ் ராமர் ஆகியோரை முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில் ஈடுபடும் ரோட்சைட் ரோமியோக்களாக நடிக்கிறார்கள்.
இது குறித்து தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பாளர் சினிஷ் கூறும்போது, “இந்த படத்தில் ஈர்க்கக்கூடிய விதிவிலக்கான அம்சம், இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் வடிவமைத்த அடிப்படை யோசனை. பெண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் எப்போதும் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் அல்...

விரைவில் வெளியாகிறது நாடோடிகள் 2
2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது .
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் "நாடோடிகள் – 2 " உருவாகி வருகிறது. இதில் சசிகுமார் - அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.
இசை - ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு - ஏகாம்பரம்
கலை - ஜாக்கி
எடிட்டிங் - ரமேஷ்
பாடலாசிரியர் – யுகபாரதி
சண்டை பயிற்சி - திலீப் சுப்புராயன்
நடனம் - திணேஷ், ...