Friday, March 28

Tag: anna

‘ஃபோரஸன் 2’ படத்துக்காக பின்னணி குரல் கொடுத்ததுடன் பாடலையும் பாடிய ஸ்ருதி ஹாசன்!

‘ஃபோரஸன் 2’ படத்துக்காக பின்னணி குரல் கொடுத்ததுடன் பாடலையும் பாடிய ஸ்ருதி ஹாசன்!

News
மிகப் பெரும் பொருட்செலவில் தயாரான டிஸ்னினியின் 'ஃபோரஸன் 2' திரைப்படம் இந்திய ரசிகர்களுக்கு மந்திரம் போன்ற  மகத்தான அனுபவத்தைத் தர இருக்கிறது. புதிய தலைமுறை போராளியாக திரையில் உருவகப்படுத்தப்பட்ட இளவரசி எலிசாவை உண்மையில் பிரதிபலிக்கும் வகையில் தனித்துவம் மிக்க ஒருவரை படத்தில் பங்கு கொள்ள வைக்க தயாரிப்பு நிறுவனம் எடுத்த முடிவில் தேர்வானவர்தான் ஸ்ருதி ஹாசன். ஆம்... பெரிதும் எதிர்பார்க்கப்படும் துணிவு மிக்க எலிசாவுக்கு தமிழ்ப் பதிப்பில், ஸ்ருதி ஹாசன் குரல் கொடுத்து உயிரூட்டியிருக்கிறார். அது மட்டுமின்றி, மிகச் சிறந்த குரல் வளம் மிக்க ஸ்ருதி ஹாசன் மூன்று பாடல்களையும் பாடியிருக்கிறார். இன் டு தி அன்னோன்... என்ற ஒரு பாடல் மட்டும் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்கள், பாடகியாக புதிய அவதாரம் எடுத்திருக்கும் தங்கள் அபிமான நடிகையின் குரலை ரசிக்க ஆவலுடன...