
வளர்ந்து வரும் பாடலாசிரியர் தரன்!
என் பாடல்களில் தரம் இருக்கும்!
வளரும் பாடலாசிரியர் தரன் நம்பிக்கை.
அண்மையில் நயன்தாரா நடித்த ஓ2 படத்தில் பயணம் குறித்தான பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அதில் வரும் வரிகள்தான் இது.
காத்தோடுதான் காத்தாக மெதப்போம்
நீரோடுதான் நீராக கலப்போம்
இயற்கையின் மடியில் கொஞ்சம்
வா சோம்பல் முறிப்போம்…
இதை எழுதியவர் வளர்ந்து வரும் பாடலாசிரியர் தரன். இலக்கிய தரத்தோடு சினிமா பாடல்கள் வர வேண்டும். அதே நேரத்தில் எளிதான வரிகளை உள்ளடக்கியும் இருக்க வேண்டும் என்கிற முனைப்போடு பாடல்களை எழுதி வருகிறார் இவர்.
தமிழில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் தரன், சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் எழுதிய ‘பக்கா மிடில் கிளாசுடா’ என்ற பாடல் மிடில் கிளாஸ் இளைஞர்களின் மோட்டிவேசன் பாடலாக இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மேலும் இவர் ஜி.வி.பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு, திரிஷாவி...