இயக்குநர் அதியனை வாழ்த்திய தயாரிப்பாளர் பா.இரஞ்சித்!
நீலம் புரொடக்சன்ஸ்” நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு “இரண்டாம் உலகப்போரின் குண்டு”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில், இயக்குநர் பா.இரஞ்சித் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
"எங்களோட இரண்டாவது தயாரிப்பு இது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. இந்தப்படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்" என்று எளிமையாக முடித்துக் கொண்டார்.
இசை அமைப்பாளர் தென்மா பேசியபோது,
"இந்த மேடையில் பேசுவதற்காக ஐந்து வருடம் பிராக்டிஸ் பண்ணேன். இன்னைக்குத் தான் நடந்தது. காரணம் பா.இரஞ்சித் சார் தான். இந்தப் படத்தோட ஜர்னில நான் நிறைய பேருக்கு நன்றி சொல்லணும். தயாரிப்பாளாரா பா.ரஞ்சித் சாருக்கு ரொம்ப நன்றி. இயக்குநர் அதியன் கூட க்ளோசா பயணிக்க முடிந்தது. அவர் பொலட்டிக்கலா யோசிக்கக் கூடியவர். அதனால் எப்படி இருப்பாரோ என்று நினைத்தேன். ஆனால் அவர் பேரன்பின் காதலர். கிஷோர்...