
ஹாரிஸ் ஜெயராஜ் மகன் சாமுவேல் நிக்கோலஸ் ஆல்பம் மூலம் அசத்தலான அறிமுகம்!
https://youtu.be/p6_lhImxcVo?si=qmDMTQaFh-8u6lqW
பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை பின்பற்றி அவரது மகன் சாமுவேல் நிக்கோலசும் இசை உலகத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.
சாமுவேல் நிக்கோலஸ் இசையமைத்து, பாடி, நாயகனாக நடித்துள்ள இளமைத் துள்ளும் 'ஐயையோ' பாடலை முன்னணி இசை நிறுவனமான திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது. இப்பாடல் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இக்கால இளைஞர்களின் கொண்டாட்டத்தை உற்சாகம் மற்றும் குதூகலம் குன்றாமல் பதிவு செய்யும் பாடலான 'ஐயையோ' மாறுபட்ட குணாம்சங்கள் கொண்ட பெண்களை பற்றியதாகும். ஒரு புதுமுகம் போன்று இல்லாமல் இசையிலும், பாடுவதிலும், நடிப்பிலும் தனது முத்திரையை பதித்துள்ளார் சாமுவேல் நிக்கோலஸ்.
பாடலைப் பற்றி பேசிய சாமுவேல் நிக்கோலஸ், "ஏழாம் அறிவு படத்தில் கோரஸ் பாடகராக இசைப் பயணத்தை தொடங்கிய நான், எனது தந்தையாரின் இசை நிகழ்ச்சிகளில் கித்தார...