Friday, December 13

Tag: jeevan

ஜீவன் நடிக்கும்  ‘பாம்பாட்டம்’!

ஜீவன் நடிக்கும் ‘பாம்பாட்டம்’!

News
6.2, ஓரம்போ, வாத்தியார் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த V.பழனிவேல் தனது வைத்தியநாதன் பிலிம் கார்டன் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மளையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் " பாம்பாட்டம் " காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற வெற்றி படங்களில் நடித்த ஜீவன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதுதான் இவர் நடிக்கும் முதல் ஹாரர் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஹாரர் படங்களை இயக்கி வரும் வி.சி வடிவுடையான் தற்போது ஹாரர் கலந்த திரில்லர் கதையை மையமாக வைத்து மிக பிரம்மாண்டமான பொருட்ச் செலவில் உருவாகும் இந்த படத்தை இயக்குகிறார். இது இதுவரை ஹாரர் படங்களில் பார்த்திராத திரைக்கதையை இந்த படத்தில் பார்க்கலாம். அந்தளவிற்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை இயக்கவுள்ளார் வி.சி.வடிவுடையான். ஐந்து மொழிகளில்...
ஜீவனின் அசரீரி…

ஜீவனின் அசரீரி…

News
அறிவியல் புனைவு திரைப்படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து விடும். அதற்கு காரணம் வெறுமனே அதன் தொழில்நுட்ப அம்சங்கள் மட்டுமல்ல, அதில் பிணைந்திருக்கும் உணர்ச்சி கூறுகளும் தான். அறிமுக இயக்குனர் ஜி.கே இயக்க, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கும் அசரீரி படத்தில் நடிகர் ஜீவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்து தயாரிப்பாளர் ஐ.பி. கார்த்திகேயன் கூறும்போது, "டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சியினால், புராண குறிப்புகளை கூட தொழில்நுட்பம் சார்ந்து வழங்குவதில் தற்போதைய தலைமுறை கவனம் செலுத்துகிறது. தனிப்பட்ட முறையில், அத்தகைய விஷயங்களில் நான் எளிதில் கவனம் செலுத்தி விடுவேன், இயக்குனர் ஜி.கே. ஸ்கிரிப்ட்டை எனக்கு விவரிக்கும்போது எனக்கு மிகவும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. அறிவியல் புனைவு கதைகளை கேட்கும்போது ஒவ்வொருவர் மனதில எழும் முதல் கேள்வி, இதை எந்த அளவுக்கு இ...