
ஆழ்வார்பேட்டை போக்குவரத்து தீவிற்கு இயக்குனர் கே.பாலச்சந்தர் பெயர்!
சென்னை ஆழ்வார்பேட்டை போக்குவரத்து தீவிற்கு இயக்குனர் சிகரம் "கே.பாலச்சந்தர் போக்குவரத்து தீவு" என பெயர் வைக்கிறது தமிழக அரசு!
கமல்ஹாசன் அலுவலகத்தில் நடைப்பெற்ற கே.பாலசந்தர் 94'வது பிறந்தநாள் விழாவில் இயக்குனர் பாரதிராஜா கலந்துக் கொண்டார்!
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார், சிரஞ்சீவி, மம்மூட்டி போன்ற முக்கிய நடிகர்கள், நடிகைகள், திரையுலக பிரபலங்களின் கடிதத்தோடு, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வாழ்ந்த பகுதியில்,
'கே.பாலசந்தர் சாலை' என பெயர் சூட்டவும், அவரின் திருவுருவ சிலை வைக்கவும் கோரிக்கையை,
கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கவிதாலயா வீ.பாபு கொடுத்த கடிதம் தற்போது தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து, பெருநகர சென்னை மாநகராட்சி, முதன்மைச் செயலர் ஆணையரின் கருத்துரு அரசால் கவனமாக விரிவான ஆய்வுக்கு பின், பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-9, பகுதி-25, கோட்டம் 123-ல் உள்ள லஸ் ச...