ஆரவ் நடிக்கும் “ராஜபீமா”வில் யாஷிகா ஆனந்த்!
ஆரவ், ஆஷிமா நர்வால் நடிப்பில் உருவாகியிருக்கும் “ராஜபீமா” திரைப்படம் 2020 ஆம் வருடத்தின் எதிர்ப்பார்க்குரிய படங்களில் ஒன்றாக ஆகியிருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி, கமர்ஷியல் என அனைத்து அம்சங்களும் கலந்து கட்டி கச்சிதமாக இருந்ததே, இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியதற்கு காரணம். இப்போது மேலும் ஒர் ஆச்சர்யமாக யாஷிகா ஆனந்தின் சிறப்புத்தோற்றம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூடுதலாக்கியிருக்கிறது.
இயக்குநர் நரேஷ் சம்பத் இது குறித்து கூறியதாவது....
ஆம், இப்படத்தில் யாஷிகா ஆனந்த் இருக்கிறார். அவர் ஒரு ஜர்னலிஸ்டாக வருகிறார். அவரது பாத்திரம் நிறைய திருப்பங்கள் கொண்டதாக, முக்கியமாக க்ளைமாக்ஸ்க்கு முன்னதான காட்சிகளில் பெரும் திருப்பங்கள் ஏற்படுத்துவதாக, ரசிகர்களுக்கு ஆச்சர்யம் தருவதாக இருக்கும். இத்திரைக்கதையை எழ...