Thursday, November 13

Tag: mgr

எம்.ஜி.ஆர் 107 வது பிறந்த நாள் விழா!

எம்.ஜி.ஆர் 107 வது பிறந்த நாள் விழா!

News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் புரட்சி தலைவர் திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு தி.நகர், அபிபுல்லா சாலையில் அமைந்துள்ள தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு இன்று (17.01.2024) காலை 10 மணியளவில் நடிகர் சங்க தலைவர் திரு.நாசர் அவர்கள் செயற்குழு உறுப்பினர்கள் திருமதி.லதாசேதுபதி மூத்த நடிகை.சச்சுஅம்மா திரு.தளபதி தினேஷ், திரு.MA.பிரகாஷ், நடிகர்.சவுந்தரராஜா திரு.அனந்தநாராயணன் மற்றும் சங்க மேளாலர் A.தாமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள். “தென்னிந்திய நடிகர் சங்கத்தினுடைய மிக மிக முக்கியமான அஸ்திவாரம் அய்யா மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள். அவருடைய ஆசியில் வெகு சீக்கீரம் இந்த நடிகர் சங்க கட்டிடத்தை அவர்கள் நினைவஞ்சலியாக கட்டி எல்லோருடைய பசியை போக்கணும் என்பதே என்னுடைய, எங்களுடைய பிராத்தனை..” - நாசர்....
எம்.ஜி.ஆர்.பிறந்த நாளில் வெளியாகும் சிரித்து வாழ வேண்டும்!

எம்.ஜி.ஆர்.பிறந்த நாளில் வெளியாகும் சிரித்து வாழ வேண்டும்!

News
எம்.ஜி.ஆர்.பிறந்த நாளில் வெளியாகும் சிரித்து வாழ வேண்டும்! எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்து கடந்த 1974 ஆண்டில் வெளியான சிரித்து வாழ வேண்டும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக லதா நடித்திருந்தார். நவீன தொழில் நுட்பத்தில் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ள இப்படத்தை  புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பிறந்த தினமான ஜனவரி மாதம் 17 ஆம் தேதியன்று வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன எம்.ஜி.ஆர்.-லதா ஜோடியுடன் எம்.என்.நம்பியார்,மனோகர்,தேங்காய் சீனிவாசன்,ஐசரிவேலன்,எஸ்.வி.ராமதாஸ்,வி.எஸ்.ராகவன்,எல்.காஞ்சனா,ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் பாடல்களை வாலியும்,புலமைப் பித்தனும் எழுத மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். ’உலகம் என்னும்..’ என்று தொடங்கும்  பாடலை புலமைப்பித்தன் எழுத எம்ஜிஆருக்காக ஷேக் சலாமத், டி.எம்.ச...
“காலத்தை வென்றவன்”!

“காலத்தை வென்றவன்”!

News
1984 அக்டோபர் மாதம் தொடங்கி 1985 மார்ச் மாதத்திற்கு இடையிலான 150 நாட்க்களில் "பொன்மனச்செம்மல்" எம்.ஜி.ஆரின் வாழ்க்கையிலும், தமிழகத்திலும் நடந்த சம்பவங்களின் தொகுப்பே இந்த ஆவணப்படம். உடல்நலம் பாதிக்கப்பட்ட எம்ஜிஆர் என்கிற மாமனிதர் நலம்பெற சாதி,மதங்களை கடந்து தமிழகமே எப்படி பிரார்த்தனை செய்தது என்பதை இந்த நூற்றாண்டில் பிறந்தவர்களுக்கு உணர்த்துவது. தங்கள் உயிரான தலைவன் நலமுடன் திரும்புவதை காண்பதற்காக கூடிய 10 லட்சம் மக்களின் ஆர்வமும், மக்களின் ஆனந்த கண்ணீரில் மிதந்த தலைவனை பற்றியது இந்த படம். ஒரு முதல்வர் உடல்நலம் பாதிக்கப்பட்டால் அவரை எப்படி மாநில அரசும் மத்திய அரசும் கவனித்து கொண்டன. தகவல் தொடர்பு,மற்றும் மருத்துவ தொழில் நுட்பம் குறைவான காலத்தில் அவரது உயிரை காப்பாற்றி கொண்டுவர வெளிப்படையாக நடந்த முயற்சிகளை விவரிக்கிறது இந்த ஆவணப்படம்....
எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடிக்கும் அனிமேஷன் திரைப்படம்!

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடிக்கும் அனிமேஷன் திரைப்படம்!

News
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவாக இருந்தது. போஸ்டர்வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அன்று அவரது கனவை நனவாக்கும் விதையை சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் விதைத்துள்ளது. ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற பெயரில் அனிமேஷன் திரைப்படமாக கல்கியின் புகழ்பெற்ற நாவலை தயாரித்துள்ளது. நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற பணி நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை இக்குழு வெளியிட்டுள்ளது. ‘பெரியார் குத்து’ பாடல் மூலம் அனைவரின் கவனத்தைக் கவர்ந்த ரமேஷ் தமிழ்மணி இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். பாகுபலி எந்திரன் போன்ற வெற்றிப்படங்களில் வசனம் பாடல்கள் எழுதிய மதன் கார்க்கி இந்தப் படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார். தவச்செல்வனின் இயக்கத்தில் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இந்...