Tuesday, April 22

Tag: review

தங்கலான் _ விமர்சனம்

தங்கலான் _ விமர்சனம்

Uncategorized
தங்கலான் _ விமர்சனம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை பீரியட் பிலிமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் ப.ரஞ்சித். வெள்ளையர் காலத்தில் நடக்கிறது கதை. தங்க வயலில் வேலை செய்ய ஆட்களை தேடுகிறார் வெள்ளை அதிகாரி. ஊரில், ஜமீனிடம் அடிமையாக வாழும் நிலையிலிருந்து மீள.. ஒடுக்கப்பட்ட மக்கள் அங்கே செல்கிறார்கள். அங்கும் அவர்களது நிலை மாறவில்லை. தங்கலான் என்கிற அவர்களது தலைவன் அதன் பிறகு என்ன முடிவெடுக்கிறார் என்பதே கதை. நாயகன் தங்கலானாக அசத்தி இருக்கிறார் விக்ரம். மனைவி மீதான காதல், குழந்தைகள் மீதான பாசம், எதிர்கால சந்ததியினர் மீதான அக்கறை என வாழ்ந்திருக்கிறார் மனிதர். இவரது நடிப்பைக் குறிப்பிட்டுச் சொல்வதானால் ஒவ்வொரு காட்சியையும் சொல்ல வேண்டும். அதி அற்புதம். விக்ரமின் புகழ் கிரீடத்தில் மற்றும் ஓர் ஒளிவீசும் வைரமாக ஜொலிக்கிறது தங்கலான்.  விக்ரமின் மனைவியாக வரும் பார்வதியும் கதாபாத்திர...
வடக்குப்பட்டி ராமசாமி _ விமர்சனம்

வடக்குப்பட்டி ராமசாமி _ விமர்சனம்

Reviews
வடக்குப்பட்டி ராமசாமி _ விமர்சனம் சந்தானம் நடித்துள்ள படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ள படம், அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. நாயகி மேகா ஆகாஷ். மேலும், நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், மாறன், தமிழ், நான் கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், ரவிமரியா, சேசு, சுரேஷ், பிரசாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார், தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீப்பிள் மீடியா பேடரி சார்பில் டி.ஜி.விஸ்வ பிரசாத் தயாரித்துள்ளார். கார்த்திக் யோகி இயக்கி இருக்கிறார். @ 'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து @ சாமியகூட காசு இருந்தாத்தான் பார்க்க முடியுது.. ...