
ஹிட்லர்” திரைப்பட முன் வெளியீட்டு விழா!
“ஹிட்லர்” திரைப்பட முன் வெளியீட்டு விழா!
*“ஹிட்லர்” திரைப்படம் உலகம் முழுதும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது !!*
Chendur film international தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி. படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில். படக்குழுவினர் பல விளம்பர நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.
இன்று தனியார் மாலில், மிகப்பெரும் மக்கள் திரள் நிரம்பியிருக்க, படக்குழுவினர் கலந்துகொள்ள, ஹிட்லர் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் விஜய் ஆண்டனி, அங்கிருந்த மக்கள் அனைவரையும், மேடைக்கு ஒவ்வொருவராக அழைத்து, அவர்களுடன் பாடல் பாடி, நடனமாடி, அவர்களின் ஆசைகளைக் கேட்டு நிறைவேற்றினார். அங்கிருந்த...