தமிழ் திரை உலகில் கடந்த ஒரு மாத காலமாக புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடாமலும் படப்பிடிப்புகள் மற்றும் சினிமா சம்பந்தமான எல்லா பணிகளையும் நிறுத்தி வைத்தும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ் திரை உலகத்துக்காக நல வாரியம் அமைக்கப்படும் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு அவர்கள் அறிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் தமிழ் திரை பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ் திரை உலகின் அனைவர் சார்பிலும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.மேலும் திரைத்துறை சம்மந்தபட்ட அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும் என நம்புகின்றோம்.
– தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்